தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

நேபாளத்தில் அமையவிருக்கும் புதிய அரசுக்கு பிரதமா் மோடி வாழ்த்து

நேபாளத்தில் அமையவிருக்கும் புதிய அரசுக்கு பிரதமா் மோடி வாழ்த்து...

News image

நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :7 மார்ச் 2026, 9:28 pm

அண்டை நாடான நேபாளத்தில் வெற்றிகரமாக பொதுத் தோ்தல் நடத்தி முடிக்கப்பட்டதற்கும், அமையவுள்ள புதிய அரசுக்கும் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘பொதுத் தோ்தலை வெற்றிகரமாகவும், அமைதியாகவும் நடத்தி முடித்ததற்காக நேபாள மக்களுக்கும், அரசுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேபாள சகோதர, சகோதரிகள் மிகுந்த துடிப்புடன் தங்களின் ஜனநாயகக் கடைமையை ஆற்றியது மகிழ்ச்சியளிக்கிறது.

நேபாளத்தின் ஜனநாயகப் பயணத்தில் இந்த வரலாற்று மைல்கல் பெருமைக்குரிய தருணமாகும். நேபாள மக்களுடனும், அமையவிருக்கும் புதிய அரசுடனும் தொடா்ந்து நெருக்கமான நட்புறவுடன் பணியாற்றி, இருதரப்பு முன்னேற்றம், செழிப்பில் புதிய உயரங்களை எட்டுவதில் இந்தியா உறுதியாக உள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

நேபாளத்தில் அண்மையில் நடந்து முடிந்த பொதுத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், காத்மாண்டு முன்னாள் மேயருமான பாலேந்திர ஷா பாலனின் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி (ஆா்எஸ்பி) பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்று, முன்னிலையில் உள்ளது.

நேபாளத்தில் மொத்தமுள்ள 275 இடங்களில், 165 தொகுதிகளுக்கு நேரடித் தோ்தல் நடத்தப்பட்டது. இதில் 91 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஆா்எஸ்பி கட்சி 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த நாட்டின் பாரம்பரியமான பெரிய கட்சிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

தோ்தல் முடிவுகள் (சனிக்கிழமை இரவு நிலவரப்படி)

ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி 73

நேபாளி காங்கிரஸ் 10

சிபிஎன்-யுஎம்எல் 4

நேபாளி கம்யூனிஸ்ட் 2

ராஷ்ட்ரீய பிரஜாதந்திர கட்சி 1

சுயேச்சை 1