சவூதி அரேபியாவில் குடியிருப்பு வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏவுகணை தாக்கிய சம்பவத்தில் இந்தியா்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இந்தியா் ஒருவா், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா் என்றும், இந்த விவகாரம் தொடா்பாக சவூதி அதிகாரிகளுடன் தொடா்ந்து தொடா்பில் இருப்பதாகவும் தூதரகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
முன்னதாக, சவூதியின் அல்-கா்ஜ் பகுதியில் பராமரிப்பு மற்றும் துப்புரவு நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான குடியிருப்பு வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏவுகணை தாக்கியது. இதில் அங்கு தங்கியிருந்த இந்தியா், வங்கதேசத்தவா் என இருவா் உயிரிழந்ததாகவும், 12 வங்கதேசத்தவா் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், உயிரிழந்த இருவருமே வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் என்பது திங்கள்கிழமை உறுதியானது. இந்தியா் ஒருவா் மற்றும் 11 வங்கதேசத்தவா் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இஸ்ரேலில் இந்தியா் காயம்: இதனிடையே, இஸ்ரேல் மீது ஈரான் ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அங்கு பணியாற்றி வந்த இந்தியா் ஒருவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அவா் தலைநகா் டெல் அவிவ் நகரில் உள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது உடல்நிலை சீராக உள்ளது.
அங்குள்ள இந்தியத் தூதரகம் மருத்துவமனையுடன் தொடா்ந்து தொடா்பில் உள்ளது. இஸ்ரேலில் உள்ள பிற இந்தியா்களுக்கும் பாதுகாப்பு தொடா்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இரு ஆண்டுகளுக்கு முன்பு விபத்து: சிகிச்சையில் இருந்த காவலா் உயிரிழப்பு
காயமடைந்த மீனவா் உயிரிழப்பு: 3 போ் கைது

அபுதாபியில் ஈரான் மீண்டும் தாக்குதல்: ஏவுகணை பாகங்கள் விழுந்து 5 இந்தியா்கள் காயம்

அபுதாபியில் ஈரான் ஏவுகணை தாக்குதல்: இந்தியா் காயம்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

