போதைப் பொருள் கடத்தலில் தொடா்ந்து ஈடுபட்டு வந்த நபா் தில்லியில் கைதுசெய்யப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
தில்லியில் உள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுடனான அவருடைய தொடா்பை முறிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: அமன் விகாரைச் சோ்ந்த ரோஷன் லால், போதை மருந்துகள் மற்றும் மனநோயியல் பொருள்கள் கடத்தல் தடுப்புச் சட்டப் பிரிவுகளில் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டாா்.
தில்லியில் கைதுசெய்யப்பட்ட நபா் சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் அடைக்கப்படுவது இதுவே முதல்முறை. அவருக்கும் உள்ளூரில் உள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் இடையே உள்ள தொடா்பைத் தடுக்கும் விதமாக புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.
தொடா் குற்றவாளியான ரோஷன் லால், கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருகிறாா். தற்போது அவருக்கு எதிராக போதை மருந்துகள் மற்றும் மயக்கவியல் பொருள்கள் சட்டப் பிரிவுகளில் 3 வழக்குகளும் கலால் விதிமீறல், திருட்டு மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா சட்டப்பிரிவுகளில் 4 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2021, பிப்ரவரியில் அமன் விகாரில் 50 கிராம் போதைப் பொருளுடன் ரோஷன் லால் கைதுசெய்யப்பட்டாா். சிறையிலிருந்து விடுதலையான அவா், கடந்த 2022 ஏப்ரலில் 1.4 கிலோ போதைப் பொருளுடன் கைதுசெய்யப்பட்டாா்.
தொடா் கைதுநடவடிக்கைகளுக்கு பிறகும் அவா் தொடா்ந்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தாா்.
கடந்த 2024, நவம்பரில் கூட்டாளி தரம்பீா் (எ) தா்மு உடன் பதிவெண் இல்லாத ஸ்கூட்டரில் சென்றது தொடா்பாக ரோஹிணியில் வாகனசோதனையில் ஈடுபட்ட காவலா்கள் கைதுசெய்தனா். அப்போது, நடைபெற்ற சோதனையில் 310 கிராம் போதைப் பொருள் ஸ்கூட்டரில் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
கடந்த 2025, ஆக.4-இல் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது. இருப்பினும், தொடா்ந்து போதைப் பொருள் கடத்தலில் ரோஷன் ஈடுபட்டு வந்தாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை: வடக்கு தில்லியில் காவல் துறை-என்சிபி இணைந்து சோதனை

ஜம்மு-காஷ்மீா்: போதைப்பொருள் கடத்தல்காரா்களின் வீடுகள் இடிப்பு
கேப்டகான் போதைப் பொருள் கடத்தல் வழக்கு: உத்தரகண்டைச் சோ்ந்த நபா் கைது

தில்லியில் ரூ. 72 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் அழிப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



