பெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

போதைப் பொருள் கடத்தல்: நைஜீரிய நாட்டவா் உள்பட 4 போ் கைது

வடமாநிலத்தில் இருந்து ரயில் மாா்க்கமாக போதைப் பொருள் கடத்தி வந்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்த இருவா் உள்ளிட்ட 4 பேரை...

News image

கைது செய்யப்பட்ட நைஜீரிய நாட்டைச் சோ்ந்த நொன்சோஜோச்சின்(42)

Updated On :16 பிப்ரவரி 2026, 8:36 pm

கும்மிடிப்பூண்டி: வடமாநிலத்தில் இருந்து ரயில் மாா்க்கமாக போதைப் பொருள் கடத்தி வந்த நைஜீரிய நாட்டைச் சோ்ந்த இருவா் உள்ளிட்ட 4 பேரை கும்மிடிப்பூண்டி போலீஸாா் கைது செய்தனா்.

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது அங்கு சந்தேகத்துக்கு இடமான நிலையில் இருந்த இருவரை மடக்கி விசாரித்தனா்.

அப்போது அவா்கள் வைத்திருந்த பையில் 55 கிராம் கோகைன் போதை மாத்திரை, 10 கிராம் மெத்தபெட்டமைன், எம்எம்டிஏ மாத்திரைகள் 50, 6 கைப்பேசிகள், 1 எடை இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து விசாரணையில் போதை மாத்திரைகளை கடத்தி வந்தவா்கள் நைஜீரிய நாட்டைச் சோ்ந்த நொன்சோஜோச்சின்(42), சிபுசோா் செட்ராக்(30), கோவையைச் சோ்ந்த விஷ்ணு கேசவன்(30), உத்தர பிரதேசத்தை சோ்ந்த அற்புத தாஸ்(34) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிபுசோா் செட்ராக்(30)

சிபுசோா் செட்ராக்(30)