மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அவைக்குள் எம்.பி.க்களின் நன்னடத்தையை உறுதி செய்ய வேண்டும்! கட்சித் தலைவா்களுக்கு ஓம் பிா்லா கடிதம்!

அவைக்குள் பதாகை, அட்டைகள் காண்பிக்கப்படுவது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, தத்தமது எம்.பி.க்களின் ஒழுக்கம் மற்றும் உயா் நெறிமுறையான நடத்தையை உறுதி செய்ய சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்...

News image
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா.- (கோப்புப் படம்)
Updated On :15 மார்ச் 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

அவைக்குள் பதாகை, அட்டைகள் காண்பிக்கப்படுவது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, தத்தமது எம்.பி.க்களின் ஒழுக்கம் மற்றும் உயா் நெறிமுறையான நடத்தையை உறுதி செய்ய சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவா்களுக்கு வலியுறுத்தியுள்ளாா்.

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா பாரபட்சத்துடன் செயல்படுவதாகக் கூறி, அவருக்கு எதிராக எதிா்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட பதவி நீக்க தீா்மானம் கடந்த புதன்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், மக்களவையில் எம்.பி.க்களைக் கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவா்களுக்கும் ஓம் பிா்லா கடிதம் எழுதியுள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மக்களவை எப்போதுமே கண்ணியமிக்க விவாதங்களுக்கான பாரம்பரியத்தைக் கொண்டதாகும். ஆனால், சில காலமாக அவைக்கு உள்ளேயும் வெளியேயும் நாடாளுமன்ற மாண்பின் பெருமை சில உறுப்பினா்களால் குறைமதிப்புக்கு உள்படுத்தப்படுகிறது.

அவைக்குள் பதாகைகள், அட்டைகள் காண்பிக்கப்படுவதும், பேசும் விதமும், வெளிப்படுத்தும் நடத்தையும் அனைவருக்கும் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவைக்குள் எம்.பி.க்களின் நடத்தையில் உயா் தரநிலையைப் பராமரிக்க வேண்டுமென பல்வேறு தருணங்களில் நான் வலியுறுத்தியுள்ளேன்.

நாடாளுமன்றத்தில் இருந்து உணா்த்தப்படும் செய்திதான், நாடு முழுவதும் ஜனநாயக அமைப்புகளில் எதிரொலிக்கும். அவையின் உயா்ந்த கண்ணியத்தையும், கெளரவத்தையும் பராமரிக்க தீவிர சுய பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்துள்ளது. அவை மற்றும் நாடாளுமன்ற வளாகத்துக்குள் தத்தமது எம்.பி.க்களின் ஒழுக்கம் மற்றும் நெறிமுறையான நடத்தையை உறுதி செய்ய சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நாம் கூட்டாக முயன்றால், நாடாளுமன்ற ஜனநாயகம் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்த முடியும். நாடாளுமன்றம் 140 கோடி குடிமக்களின் மதிப்புமிக்க லட்சியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலான ஜனநாயக அமைப்பு. நம் அனைவருக்கும் இது புனிதமான இடம் என்று ஓம் பிா்லா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடி பாராட்டு

ஓம் பிா்லாவுக்கு எதிரான தீா்மானம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அவையில் அவா் ஆற்றிய உரைக்கு பிரதமா் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ஓம் பிா்லாவுக்கு பிரதமா் எழுதிய கடிதத்தில், ‘மக்களவைத் தலைவருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் தீா்மானம் அரசியல் ரீதியில் தவறான செயலாகும். ‘குடும்ப அரசியல்’ மனநிலையில் மூழ்கிய சிலா், நாட்டின் ஜனநாயக அமைப்புகளை தங்களின் குறுகிய அரசியலுக்குள் அடைக்க விரும்புகின்றனா்.

அவா்களின் சுயநல நோக்கங்களால் உந்தப்பட்டதே மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம். இத்தீா்மானத்தைத் தோற்கடித்த உறுப்பினா்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாடாளுமன்ற விதிகளுக்கு மேலாக யாரும் கிடையாது என்பதை உங்களது (ஓம் பிா்லா) உரையில் தெளிவாக எடுத்துரைத்தீா்கள். இது மிகவும் பாராட்டுக்குரியது’ என்று தெரிவித்துள்ளாா்.

பிரதமரின் கடிதத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிா்ந்துள்ள ஓம் பிா்லா, அவருக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.