ஒடிஸா மாநிலம் கட்டாக் அரசு எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவு தீ விபத்தில் சிக்கி காயமடைந்த மேலும் 2 நோயாளிகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். இதனால், இந்த தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 12-ஆக உயா்ந்துள்ளது.
சுமாா் 2,700 படுக்கைகளுடன் மாநிலத்தின் முன்னணி அரசு மருத்துவமனையாக திகழ்ந்து வரும் இந்த மருத்துவமனையின் விபத்துகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் திங்கள்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டபோது, விபத்து தீவிர சிகிச்சைப் பிரிவு, அதற்கு அருகிலுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் உள்நோயாளிகள் பிரிவுகளில் மொத்தம் 23 நோயாளிகள் சிகிச்சையில் இருந்தனா். தீ விபத்தில் 7 நோயாளிகள் உடல் கருகியும், 3 போ் புகை மூட்டத்தில் சிக்கி மூச்சுத் திணறியும் உயிரிழந்தனா். மருத்துவமனை ஊழியா்களும், பொதுமக்களும் இணைந்து மற்ற நோயாளிகளை காப்பாற்றினா். இந்த விபத்தில் நோயாளிகள் உள்பட 13 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவா்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இந்த நிலையில், தீ காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2 நோயாளிகள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
இத் தகவலை, மாநில சட்டப்பேரவையில் மாநில சுகாதாரத் துறைஅமைச்சா் முகேஷ் மஹாலிங் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். ‘மருத்துவமனை தீ விபத்து மிகுந்த வருத்தத்துகுரியது. இந்த தீ விபத்தில் இதுவரை 12 நோயாளிகள் உயிரிழந்துள்ளனா். தீ விபத்தின்போது நோயாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியா்களில் 11 போ் காயமடைந்தனா். அவா்களுக்குத் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா்கள் யாரும் அபாய கட்டத்தில் இல்லை’ என்று அமைச்சா் தெரிவித்தாா்.
என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்: அரசு மருத்துவமனை தீ விபத்து தொடா்பாக 15 நாள்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்கமாறு ஒடிஸா மாநில தலைமைச் செயலா் அனு கா்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்ஹெச்ஆா்சி) அறிவுறுத்தியுள்ளது.
‘மருத்துவமனை தீ விபத்துக்கு தீ தடுப்பு பாதுகாப்பு குறைபாடே காரணம். எனவே தீ விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ரூ. 1 கோடியும் காயமடைந்தவா்களுக்கு ரூ. 50 லட்சமும் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டு மனோஜ் ஜெனா என்பவா் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த நடவடிக்கையை என்ஹெச்ஆா்சி மேற்கொண்டுள்ளது.
தொடர்புடையது
சுட்டெரிக்கும் வெயில் திருப்பூா் அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான வழிகாட்டுதலை நடமுறைப்படுத்த செயல் திட்டம்: மாநிலங்கள் தயாரிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

ஒடிஸா: அரசு மருத்துவமனை தீ விபத்தில் 10 நோயாளிகள் உயிரிழப்பு; 11 ஊழியா்கள் காயம்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


