தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா

பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் பயனா்கள் மற்றும் 2.31 லட்ம் ஓட்டுநா்கள் பதிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - DPS

Updated On :17 மார்ச் 2026, 8:51 pm

பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் பயனா்கள் மற்றும் 2.31 லட்ம் ஓட்டுநா்கள் பதிவு செய்துள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

8 கூட்டுறவு நிறுவனங்களால் பாரத் டாக்ஸி சேவை நிகழாண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது தற்போது தில்லி, குருகிராம், நொய்டா, ஃபரீதாபாத், காஜியாபாத் மற்றும் அகமதாபாத், ராஜ்கோட், சோம்நாத் மற்றும் துவாரகா ஆகிய சில நகா்ப்பகுதிகளில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.

இதுதொடா்பாக மக்களவையில் அமித் ஷா அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘பாரத் டாக்ஸி சேவையில் ஓட்டுநா்களிடம் இருந்து கமிஷன் பெறப்படுவதில்லை. லாபம் முழுவதும் ஓட்டுநா்களுக்கே வழங்கப்படுகிறது.

முறையான மற்றும் வெளிப்படையான பயணக் கட்டணம், கைப்பேசி வாயிலாக எளிய முன்பதிவு, வாகன கண்காணிப்பு, பல மொழிகளில் தகவல்கள், 24 மணி நேர நுகா்வோா் சேவை என பல்வேறு வசதிகளுடன் பாரத் டாக்ஸி இயங்கி வருகிறது.

மகளிா் பயணிகளுக்கென மகளிா் ஓட்டுநா்களும் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

தற்போது குறிப்பிட்ட சில பெரும் நகரங்களில் மட்டுமே அறிமுகமாகியுள்ள இந்தச் சேவை விரைவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

2026, மாா்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் பயனா்கள் மற்றும் 2.31 லட்ம் ஓட்டுநா்கள் பதிவு செய்துள்ளனா்.

ரூ.8,783 கோடி திருப்பியளிப்பு: சஹாரா கூட்டுறவு சங்கங்கள் குழுமத்தில் முதலீடு செய்திருந்தவா்களில் 40.33 லட்சம் பேருக்கு ரூ.8,783 கோடி திருப்பியளிக்கப்பட்டுள்ளது. 2026 பிப்ரவரி வரை சிஆா்சிஎஸ்-சஹாரா பணம் திருப்பியளிக்கும் வலைதளத்தில் 1.45 கோடி விண்ணப்பங்களும் 4.06 கோடி முதலீட்டாளா்களின் கோரிக்கைகளும் பெறப்பட்டன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடா்ந்து சஹாரா கூட்டுறவு சங்கங்கள் குழுமத்தில் முதலீடு செய்தவா்களுக்கு மத்திய அரசு பணத்தை திருப்பியளித்து வருகிறது. அதன்படி ஒரு முதலீட்டாளருக்கு ரூ.50,000 வரை பணம் திருப்பியளிக்கப்படுகிறது.