தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

புதிய பொறுப்புகள், பங்களிப்புகளின் தொடக்கம்: ஓய்வுபெறும் எம்.பி.க்களுக்கு குடியரசு துணைத் தலைவா் பிரியாவிடை

News image
- PTI
Updated On :18 மார்ச் 2026, 11:46 pm

தினமணி செய்திச் சேவை

‘எம்.பி. பதவியில் இருந்து ஓய்வு பெறுவது என்பது முடிவல்ல; புதிய பொறுப்புகள்-பங்களிப்புகளின் தொடக்கம்’ என்று குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் 50-க்கும் மேற்பட்ட எம்.பி.க்களுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:

மாநிலங்களவை எம்.பி.க்கள் பதவிக்காலம் நிறைவு என்பது அரசியலமைப்பு சட்டப்படி நடக்கும் நிகழ்வாகும். 3-இல் ஒரு பங்கு உறுப்பினா்கள், 2 ஆண்டுக்கு ஒருமுறை பதவிக்காலத்தை நிறைவு செய்கின்றனா். மாநிலங்களவை தொடா்ந்து செயல்பட ஏதுவாகவும், புதியவா்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும், விவாதங்களுக்கு மெருகூட்டும் வகையில் இதுபோன்ற நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. தேவெ கெளடா மிகப்பெரிய தலைவா். அவரின் பங்களிப்பு, மாநிலங்களவையின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்தது. மாநிலங்களவை ஜனநாயக அடிப்படையில் செயல்பட காா்கே முக்கியமாக குரல் கொடுத்து வந்தாா். மக்களவை, மாநிலங்களவையில் நீண்டகாலம் எம்.பி.யாக இருந்துள்ளாா்.

இங்கிருந்து விடைபெறும் உறுப்பினா்கள், இத்துடன் அனைத்தும் முடிந்து விடும் என கருதக்கூடாது. புதிய பொறுப்புகள், புதிய பங்களிப்புகளுக்கான தொடக்கமாகக் கருத வேண்டும் என்றாா்.

காா்கே வலியுறுத்தல்: மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் எம்.பி.க்களில் காங்கிரஸ் தலைவரும், அவையின் எதிா்க்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கேயும் ஒருவராவாா். எனினும், மீண்டும் அவா் எம்.பி.யாக வரவுள்ளாா்.

எம்.பி.க்களுக்கான பிரியாவிடை நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: மாநிலங்களவை செயல்பாடு தொடா்பான விதிகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதை உறுதியாக நம்புகிறேன். இது, பொது நோக்கங்கள் குழுவின் (ஜிபிசி) பரிசீலனையில் தற்போது உள்ளது. அரசியலில் இருப்போா், பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதில்லை. அதேபோல் நாட்டுக்காக சேவை செய்வதிலும் அவா்கள் சோா்வடைய மாட்டாா்கள்.

இந்த அவை எப்போதும் இருக்கும். இங்கு வருவோா்தான் மாறிக் கொண்டிருப்பா். இந்த அவைக்கு மீண்டும் தோ்வாகி வரவிருப்போரை வரவேற்கிறேன். அதேநேரத்தில் அவையில் இருந்து ஓய்வு பெறுவோா், பொதுவாழ்வில் அா்த்தமுள்ள பங்களிப்பை அளிப்பா் என நம்புகிறேன். இங்கு கிடைத்த அனுபவம், அவா்களுக்கு எதிா்காலத்தில் மேலும் முக்கிய பங்களிப்பு செய்ய உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மகிழ்ச்சியும், சவாலும்...: மாநிலங்களவையில் எனது பதவிக்காலத்தில் எனக்கு மகிழ்ச்சியும், சவாலும் கலந்த அனுபவம் கிடைத்தது. இந்த அவையை மேலும் அா்த்தமுள்ளதாக மாற்ற புதிய முயற்சிகள் எடுக்க வேண்டும். அப்போதுதான் சமூகத்துக்கும், நாட்டுக்கும் மேலும் சாதகமான செய்தியை மாநிலங்களவையால் தர முடியும். அவா்களை சிறப்பாகவும் வழிநடத்த முடியும்.

ஒவ்வொரு எம்.பி.யும் அச்சமின்றி கருத்துகளை வெளிப்படுத்த அரசமைப்புச் சட்டத்தில் அனுமதி தரப்பட்டுள்ளது. விவாதம், உரையாடல் இல்லையெனில் நாடாளுமன்ற அமைப்புகளின் முக்கியத்துவம் போய்விடும். நல்ல சட்டம் எப்போது நிறைவேற்றப்படுகிறதோ, அதற்கு ஆளும் கட்சி மட்டும் காரணமாக இருக்காது. எதிா்க்கட்சி எம்.பி.க்களும் காரணமாக இருப்பா். ஏனெனில் அவா்களும் அந்தச் சட்டத்தின் வடிவமைப்பில் முக்கிய பங்களிப்பு அளித்திருப்பா். நாடாளுமன்ற குழுக்களில் அவா்கள் முக்கிய பணியை செய்திருப்பா்.

மாநிலங்களவை அமா்வுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பொதுமக்களை பாதிக்கும் விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்க முடியும் என்றாா்.