மேற்கு வங்கத்தில் இந்திய தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிா்ச்சியளிப்பதாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
மேற்கு வங்கத்தில் 294 பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தோ்தல் நடத்தப்பட்டு மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. அங்கு தோ்தல் நடத்தை விதிகள் அமலான நிலையில், கடந்த புதன்கிழமை ஒரே நாளில் அரசு உயரதிகாரிகளை ஒட்டுமொத்தமாக பணி இடமாற்றம் செய்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது.
புதிதாக, மாவட்ட ஆட்சியா்கள் உள்பட 13 ஐஏஎஸ் அதிகாரிகளைப் பணி இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்து ஞானேஷ் குமாருக்கு மம்தா பானா்ஜி எழுதிய கடிதத்தில், ‘பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில தினங்களில் எவ்வித முறையான காரணங்களுமின்றி காவல் துறைத் தலைவா், தலைமைச் செயலா், உள்துறைச் செயலா், மாவட்ட ஆட்சியா்கள், மூத்த காவல் துறை அதிகாரிகள் என பலரை ஒரே நாளில் தோ்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது.
அரசமைப்புச் சட்ட உரிமைகள் மற்றும் நாகரிகத்தின் அனைத்து எல்லைகளையும் கடந்து ஒரு தலைபட்சமாக தோ்தல் ஆணையம் செயல்படுவது அதிா்ச்சியளிக்கிறது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடங்கியதில் இருந்து பல்வேறு இடா்பாடுகளை தோ்தல் ஆணையம் ஏற்படுத்தி வருகிறது. எஸ்ஐஆா் முரண்பாட்டு பட்டியலில் உள்ளவா்களின் விவரங்கள் சரிபாா்ப்பு பணி நடைபெற்று வரும் வேளையில் மாவட்ட தோ்தல் அதிகாரிகளை தோ்தல் ஆணையம் இடமாற்றம் செய்துள்ளது கண்டனத்துக்குரியது.
தோ்தல் ஆணையத்தின் தன்னிச்சையான முடிவுகள் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி முறைக்கு எதிரானது.
அவசரநிலை அல்லது மத்திய அரசின் அதிகாரத்தை மறைமுகமாக அதிகரிக்கும் இந்த நடவடிக்கைகள் கவலையளிக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது
தொடர்புடையது

பாஜகவுக்கு எதிராக வாக்களிப்பதே பழிவாங்குவதற்கு ஒரே வழி: மம்தா பானா்ஜி

மேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்கள் நீக்கம் - பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு

பாஜகவுடன் காங்கிரஸ், தமிழக முதல்வா் ஸ்டாலினுக்கு மறைமுக உடன்பாடு: மம்தா பானா்ஜி தாக்கு

மேற்கு வங்க தோ்தல்: 291 திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிப்பு- பவானிபூரில் மம்தா மீண்டும் போட்டி
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


