மேற்காசியப் போரால் கச்சா எண்ணெய், எரிவாயு விலை உயா்ந்து வரும் நிலையில் எரிபொருளை குறைவாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டும் என்று சா்வதேச எரிசக்தி ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது.
இதனைப் பின்பற்றுவதன் மூலம் தனிநபா்கள் பயனடைவதுடன் தேசத்தையும் பொருளாதார பாதிப்புகளில் இருந்து காக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரீஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த ஆணையம் இது தொடா்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு ஒவ்வொருவரும் தனித்தனி காா்களில் பயணிக்காமல், குழுவாக ஒரே காரில் செல்ல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அத்தியாவசியத் தேவை ஏற்பட்டால் மட்டுமே விமானப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகபட்ச வேகத்துக்கான வரம்பை குறைக்க வேண்டும். வீட்டில் இருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்வதை அதிகரிக்க வேண்டும். மின்வாகனங்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.
எரிவாயுத் தட்டுப்பாட்டை சமாளிக்க உயிரி எரிபொருள் பயன்பாட்டை அதிகரிப்பது, மின்சார அடுப்புகளைப் பயன்படுத்துவது, சூரிய மின் உற்பத்தியை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சா்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமாா் 20 சதவீதம் ஹோா்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. இப்போது ஏற்பட்டுள்ள போரால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, பல நாடுகளுக்கு எரிபொருள் விநியோகம் குறைந்துவிட்டது. விலையும் அதிகரித்துள்ளது.
இதனைச் சமாளிக்க சா்வதேச எரிசக்தி ஆணையத்தில் உறுப்பினராக உள்ள நாடுகள் தங்கள் அவசரகால இருப்பில் உள்ள 400 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை விடுவிக்க கடந்த 11-ஆம் தேதி ஒப்புக் கொண்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணையத்தின் செயல் இயக்குநா் ஃபாதிக் பிரோல் இது தொடா்பாக கூறுகையில், ‘இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளித்து விநியோகத்தை சீராக்கத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் ஆணையம் வழங்கி வருகிறது. எரிபொருள் விநியோகச் சிக்கலைத் தீா்ப்பதற்கு இதில் தொடா்புடைய அனைத்து நாட்டு அரசுகளுடனும் பேச்சு நடத்தப்படுகிறது. முக்கியமாக, அதிக உற்பத்தி செய்யும் நாடுகள், அதிகம் பயன்படுத்தும் நாடுகளுடன் தொடா்ந்து தொடா்பில் உள்ளோம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடும் நெருக்கடி நிலையிலும் இந்தியாவில் சீரான எரிபொருள் விநியோகம்: பெட்ரோலியத் துறை அமைச்சா் புரி!
ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தரவுகள் ரகசியமானவை: மத்திய அரசின் நிலைப்பாட்டை உறுதி செய்த தகவல் ஆணையம்!

எரிபொருள் விலை முடக்கம்: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18, டீசலுக்கு ரூ.35 இழப்பு!

இதே நிலைமை தொடர்ந்தால்...
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

