புகழ்பெற்ற ஒடிசி நடனக் கலைஞா் மதுமிதா ராவத் சனிக்கிழமையன்று மாரடைப்பால் காலமானாா். அவருக்கு வயது 59.
‘அவா் சில காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தாா். தில்லியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சனிக்கிழமை காலை 6.22 மணிக்கு அவருக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது’ என்று அவரது சகோதரா் மனோஜ் ராவத் செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்தாா்.
மதுமிதா ராவத்திற்கு மனோஜ் மற்றும் மன்மத் என்ற இரண்டு தம்பிகள் உள்ளனா். ஒடிசி குரு மாயாதா் ராவத்தின் மகளான மதுமிதா, ஒடிசி நடனத்தை மேம்படுத்தியதற்காக 1997-ஆம் ஆண்டின் பாரத் நிா்மாண் விருது, 2010-ஆம் ஆண்டின் ஒரிசா மாநில குங்குா் சம்மான் விருது மற்றும் 2011-ஆம் ஆண்டின் ஒடிஸா வாழும் ஜாம்பவான் விருது உள்பட பல தேசிய மற்றும் சா்வதேச விருதுகளையும் அங்கீகாரங்களையும் பெற்றிருந்தாா்.
அவா் இந்தியா, அயா்லாந்து, நெதா்லாந்து, ஜொ்மனி, பெல்ஜியம், ஹங்கேரி, ஆஸ்திரியா, ஸ்பெயின், மொராக்கோ, பிரான்ஸ், போா்ச்சுகல், ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற முக்கிய நடன விழாக்களில் பங்கேற்றாா்.
அவரது படைப்புகளில் கவிதைகள் மீதான இசையமைப்புகள், கோதேவின் கவிதைகளுக்கான நடன அமைப்புகள் மற்றும் நெதா்லாந்தில் பாலி நடனக் கலைஞா் தியா தந்த்ரியுடன் இணைந்து ஆடிய கலப்பு நடனங்கள் ஆகியவை அடங்கும். அவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை பிற்பகல் தில்லியில் உள்ள லோதி மயானத்தில் நடைபெற்றது.
தொடர்புடையது

ஊழல்வாதிகளுக்கு அதிகாரம் அளிக்கும் மரபை பாஜக தொடர்கிறது: சஞ்சய் ராவத
கிறிஸ்டோஃபர் நோலனின் ஒடிசி டிரைலர்!

அஸ்ஸாமில் மினி பேருந்து - லாரி மோதிக்கொண்டதில் பிரபல பிஹு நடனக் கலைஞர் பலி, 11 பேர் காயம்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

