மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

ஜனநாயகத்தை சீர்குலைக்கும் முயற்சியில் பாஜக: மமதா குற்றச்சாட்டு!

முதலில் வாக்குரிமை அடுத்து குடியுரிமை பறிப்பதாக மமதா குற்றச்சாட்டு..

News image

மமதா பானர்ஜி - dps

Updated On :25 மார்ச் 2026, 3:56 pm IST

ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் அரசியலமைப்பு நிறுவனங்களை பாஜக தவறாகப் பயன்படுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

வடக்கு வங்காளத்தின் மைனாகுரியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் மமதா உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,

பாஜக தலைமையிலான மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் வாக்குரிமையைப் பறித்து வருவதாகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை(என்ஆர்சி) அமல்படுத்துவன் மூலம் குடியுரிமையைப் பறிக்கும் முயற்சிகள் அடுத்தகட்டமாக அமையக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) எனும் செயல்முறையின் மூலம் குறிப்பிட்ட சமூகங்கள் தேர்தல் நடைமுறைகளிலிருந்து விலக்கி வைக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

எஸ்ஐஆர் செயல்முறையின் மூலம் ராஜ்வன்ஷி சமூகத்தினரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அந்த சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் பெயர்களும் நீக்கப்பட்டு வருகின்றன. எஸ்ஐஆர் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டால், அதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இன்று வாக்குரிமையைப் பறிக்கிறார்கள், நாளை தேசிய குடிமக்கள் பதிவேட்டைக் கொண்டுவந்து குடியுரிமையைப் பறிப்பார்கள்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பெயர்களை நேரடியாகக் குறிப்பிடாமல், தில்லியில் இருக்கும் பெரியவர்களுக்கு விடைகொடுங்கள் என்று கூட்டத்தில் கூடியிருந்த மக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

திரிணமூல் காங்கிரஸின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதாகவும், மாநில மக்கள் தான் தனது மிகப்பெரிய பலம் என்றும் குறிப்பிட்ட அவர், என்னிடமிருந்து அனைத்தையும் அவர்கள் பறித்துவிட்டார்கள். இப்போது என் கையில் எஞ்சியிருப்பது மக்கள் மட்டுமே என்று அவர் கூறினார்.

முன்னதாக, வடக்கு வங்காளத்திற்குப் புறப்படுவதற்கு முன்பு, கொல்கத்தா விமான நிலையத்தில் பேசிய அவர்,

பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலத்தில் பல வேட்புமனுக்கள் ரத்து செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டினார். தனது கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யச் செல்லும்போது தங்களுடன் வழக்குரைஞர்களையும் அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் பல வேட்புமனுக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனக்கு பாஜக மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் நம்பிக்கை இல்லை என்று அவர் கூறினார்.

Summary

West Bengal Chief Minister Mamata Banerjee on Wednesday launched a sharp attack on the BJP, the Centre and the Election Commission, accusing them of misusing Constitutional institutions to undermine democracy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.