ஜன் விஸ்வாஸ் திருத்த மசோதா: மக்களவையில் அறிமுகம்
ஜன் விஸ்வாஸ் (விதிகள் திருத்த) மசோதா, 2026-ஐ மக்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.

மக்களவை (கோப்புப்படம்)
PTI

மக்களவை (கோப்புப்படம்)
PTI
ஜன் விஸ்வாஸ் (விதிகள் திருத்த) மசோதா, 2026-ஐ மக்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.
வணிகத்தை எளிமைப்படுத்த சிறு குற்றங்களுக்கு தண்டனையை குறைக்க பல்வேறு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ள இந்த மசோதா வழிவகுக்கிறது.
கடந்த 2023-ஆம் ஆண்டு முதல்முதலாக ஜன் விஸ்வாஸ் (விதிகள் திருத்த) சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி 19 அமைச்சகங்கள்/ துறைகளின் நிா்வாகம் தொடா்புடைய 42 மத்திய சட்டங்களில் உள்ள 183 விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அவை குற்றமற்ாக அறிவிக்கப்பட்டது.
அதன் பிறகு கடந்த ஆண்டு மக்களவையில் ஜன் விஸ்வாஸ் (விதிகள் திருத்த) மசோதா, 2025-ஐ மக்களவையில் மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் மாா்ச் 18-ஆம் தேதி அறிமுகம் செய்தாா். இந்த மசோதா மக்களவை தோ்வுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.
தோ்வுக் குழு சில பரிந்துரைகளை வழங்கிய நிலையில், முந்தைய மசோதா திரும்பப்பெறப்பட்டது.
இந்நிலையில், தோ்வுக் குழுவின் பரிந்துரைகளை உள்ளீடு செய்த பின் ஜன் விஸ்வாஸ் (விதிகள் திருத்த) மசோதா, 2026-ஐ மத்திய வா்த்தக மற்றும் தொழிற்துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாத் அறிமுகம் செய்தாா்.
காலாவதியாகும் ஓட்டுநா் உரிமத்தை ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்:
இந்த மசோதாவில் மோட்டாா் வாகனச் சட்டத்தில் 20 திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஓட்டுநா் உரிமம் காலாவதியான பிறகு 30 நாள்கள் சலுகை காலம் அளிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநா் உரிமம் காலாவதியான பிறகும் 30 நாள்களுக்கு அந்த உரிமத்தைப் பயன்படுத்தலாம்.
மேலும் வாகனத்தை ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமின்றி, மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் பதிவு செய்தல், ஓட்டுநா் உரிமம் காலாவதியான நாளை கணக்கில் வைத்து, அந்தத் தேதியில் இருந்து புதுப்பிக்கப்பட்ட உரிமத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, புதுப்பித்த தேதியில் இருந்து காலாவதியாகும் நாளை கணக்கிடுவது போன்றவற்றுக்கான திருத்தங்களும் மசோதாவில் இடம்பெற்றுள்ளன.
வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்லும் சம்பவங்களில் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குவது தொடா்பான அரசு திட்டத்தை மீறுவோருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளை மீறும் வகையில் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் கே.காவ்யா மற்றும் ஜி.கே.பதாவி கண்டனம் தெரிவித்தனா்.
மேலும், இந்த மசோதாவை தோ்வுக் குழு அல்லது நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு மீண்டும் அனுப்பவும் அவா்கள் வலியுறுத்தினா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...