ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

உ.பி.யில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட மசூதி இடிப்பு!

உத்தரப் பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் அரசு நிலத்தில் கட்டப்பட்ட மசூதி இன்று அரசு நிர்வாகத்தால் இடிக்கப்பட்டது.

News image

மசூதி இடிப்பு - GROK AI

Updated On :30 மார்ச் 2026, 6:13 pm IST

உத்தரப் பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் அரசு நிலத்தில் கட்டப்பட்ட மசூதி இன்று அரசு நிர்வாகத்தால் இடிக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசத்தின் சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள நைகான் பெகாத்தி கிராமத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மசூதி இன்று இடிக்கப்பட்டது.

அங்கு, குளம் மற்றும் சுடுகாட்டிற்காக ஒதுக்கப்பட்ட அரசி நிலத்தின் மீது மசூதி கட்டப்பட்டிருப்பதாக கிராம சபை அளித்த புகாரின் பேரில் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மசூதியை இடிக்கும் முன்னர் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்தப் பகுதியில் பாதுகாப்புக்கு காவல்துறையினர் 500 பேர் குவிக்கப்பட்டனர்.

இந்தப் பிரச்னை நீண்டகாலமாக நிலுவையில் இருந்த நிலையில் கடந்த டிசம்பர் 18, 2025-ல் வழக்குப் பதியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஜனவரி 6, 2026 அன்று மாவட்ட நீதிமன்றம் மசூதி சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாகக் கூறி இடிக்க உத்தரவிட்டிருந்தது. மேலும், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கட்டடத்தை காலி செய்யவும் பொருள்களை அகற்றவும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், காலி செய்வதற்கான அவகாசம் முடிந்ததால் மசூதியை இடித்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்த மசூதியின் மௌலானா அப்துல் ரஹ்மான், இது அரசியல் ரீதியான நடவடிக்கை என்று தெரிவித்தார்.

Summary

Mosque on 'pond land' in UP's Sitapur demolished in pre-dawn action

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.