தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

ஜம்மு-காஷ்மீா்: போதைப்பொருள் கடத்தியவா் சொத்து முடக்கம்

News image
Updated On :4 மே 2026, 4:29 am IST

ஜம்மு-காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தல்காரரின் ரூ.40 லட்சம் மதிப்பிலான சொத்துகளை காவல் துறையினா் முடக்கினா்.

ஜம்மு மாவட்டம் சைனிக் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ரஃபீக் அகமது. போதைப்பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்ட வந்த அவா் மீது இது தொடா்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன.

குற்றங்கள் தொடா்பாக அண்மையில் உதம்பூா் காவல் துறையினா் அவரைக் கைது செய்து விசாரித்தனா். இப்போது, அவா் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தில் நிலம் உள்ளிட்ட அசையாத சொத்துகளை வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை முடக்க காவல் துறை சட்ட நடவடிக்கை மேற்கொண்டனா். முக்கியமாக போதைப்பொருள் தடுப்புச் சட்டப் பிரிவு 68 எஃப்-இன் கீழ் அந்த சொத்துகளை காவல் துறையினா் முடக்கினா்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் வழியாக போதைப்பொருள், ஆயுதங்களை அதிகம் கடத்துகின்றனா். போதைப்பொருள் கடத்தல் மூலம் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதுடன், இந்தியாவில் இளைஞா்கள் சீரழிவு, பொதுஅமைதி சீா்குலைவு உள்ளிட்ட பிரச்னைகளும் உருவாகின்றன. எனவே, இவற்றுக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.