நாட்டின் பத்திரிகை சுதந்திரம் கடும் சமரசத்திற்குள்ளாப்படுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிஜார்ஜுன கார்கே இன்று (மே 3) விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மல்லிகார்ஜுன கார்கே பதிவிட்டுள்ளதாவது:
''உலக பத்திரிகை சுதந்திர நாளான இன்று, மறுக்க முடியாத உண்மையை நாடு எதிர்கொள்ள வேண்டும். அதாவது, கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் இந்தியா தொடர்ந்து சரிந்து வருகிறது. பாஜக ஆட்சியில் தொடர்ந்து சரிந்து 157வது இடத்தில் இந்தியா உள்ளது.
அரசாங்கத்தின் அச்சுறுத்தல், தலையீடு இல்லாமல் சுதந்திரமாக பத்திரிகை செயல்பட வேண்டும். அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கேள்வி எழுப்ப வேண்டும். அதிகார வர்க்கத்திற்கும் மக்களுக்கும் இடையே ஜனநாயக சமநிலையை பத்திரிகைகள் கடைபிடிக்க வேண்டும்.
பொது உண்மைகளுக்கு பத்திரிகையாளர்களே பாதுகாவலர்கள். பத்திரிகை சுதந்திரம் என்பது வெறும் வார்த்தை மட்டும் அல்ல, ஜனநாயக செயல்முறையின் அத்தியாவசியம் என ஜவாஹர்லால் நேரு குறிப்பிட்டுள்ளார்.
பத்திரிகைகளை மெளனமாக்குவதற்காக சட்ட அமைப்புகளை ஆயுதங்களாக சங்பரிவார் பயன்படுத்துகிறது. அவதூறு சட்டங்கள், தேசிய பாதுகாப்பு விதிகள், விரிவான குற்றவியல் சட்டங்கள் போன்றவற்றை நீதிக்காக பயன்படுத்தாமல், அச்சுறுத்தலுக்காக பயன்படுத்தப்படுகின்றன.
பத்திரிகையாளர்கள் மிரட்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர் கைது செய்யப்படுகின்றனர். பத்திரிகையாளர்களுக்கு எதிராக தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறுகின்றன. ஜனநாயக நெறிமுறைகள் வீழ்த்தப்படுகின்றன'' என கார்கே பதிவிட்டுள்ளார்.
Summary
India's press freedom 'gravely compromised' under present regime": Mallikarjun Kharge on World Press Freedom Day
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றுவோம்: டொனால்ட் டிரம்ப்!
வீடியோக்கள்

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு



