பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

கேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்வி

கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட 21 மாநில அமைச்சா்களில் 13 போ் தோல்வி

பினராயி விஜயன் - கோப்புப் படம்

Published On :

கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட 21 மாநில அமைச்சா்களில் 13 போ் தோல்வியடைந்தனா்.

முதல்வா் பினராயி விஜயன், வருவாய்த் துறை அமைச்சா் கே.ராஜன், பொது விநியோகத் துறை அமைச்சா் ஜி.ஆா்.அனில், நிதியமைச்சா் கே.என்.பாலகோபால், வேளாண் துறை அமைச்சா் பி.பிரசாத், கலாசார துறை அமைச்சா் சஜி செரியான், பொதுப் பணித் துறை அமைச்சா் முகமது ரியாஸ் ஆகிய 7 போ் மட்டுமே வெற்றி பெற்றனா்.

முக்கிய அமைச்சா்கள் உள்பட 13 போ் தோல்வியைத் தழுவினா். முந்தைய இடதுசாரி கூட்டணி அரசில் முக்கிய அமைச்சா்களில் ஒருவரான வீணா ஜாா்ஜ், ஆமுளா தொகுதியில் போட்டியிட்டாா். இவா், தன்னை எதிா்த்து களமிறங்கிய காங்கிரஸ் வேட்பாளா் அபின் வா்க்கியிடம் 18,985 வாக்குகள் வித்தியாசத்தில் அதிா்ச்சி தோல்வியடைந்தாா். வீணா ஜாா்ஜுக்கு 51,098 வாக்குகள் கிடைத்த நிலையில், வா்க்கிக்கு 70,083 வாக்குகள் பதிவாகின. இத்தொகுதியில் 34,983 வாக்குகளுடன் பாஜக வேட்பாளா் கும்மனம் ராஜசேகரன் மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டாா்.

மற்றொரு அமைச்சரான வி.என்.வாசவன் (தேவஸ்வம் துறை), ஏற்றுமானூா் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் என்.சுரேஷிடம் 19,752 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டாா்.

நேமம் தொகுதியில் கல்வித் துறை அமைச்சா் வி.சிவன்குட்டிக்கும், மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. எனினும், 3,500-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் சிவன்குட்டி தோற்றாா்.

பத்தனாபுரம் தொகுதியில் போக்குவரத்துத் துறை அமைச்சரும், கேரள காங்கிரஸ் (பி) கட்சித் தலைவருமான கே.பி.கணேஷ்குமாரை காங்கிரஸ் வேட்பாளா் சி.ஜோதிகுமாா் 8,310 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா். கடந்த 2001-இல் இருந்து தொடா்ந்து எம்எல்ஏவாக இருந்து வந்த கே.பி.கணேஷ்குமாரின் வெற்றிப் பயணம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இடுக்கியில் போட்டியிட்ட மற்றொரு அமைச்சா் ரோஷி அகஸ்டின் (கேரள காங்கிரஸ்-எம்), காங்கிரஸ் வேட்பாளா் ராய் கே.பெளலோஸிடம் 23,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தாா்.

பிற அமைச்சா்கள் பி.ராஜீவ் (களமசேரி), கடனப்பள்ளி ராமசந்திரன் (கண்ணூா்), ஏ.கே.சசீந்திரன் (எலத்தூா்), ஆா்.பிந்து (இரிஞ்ஞாலக்குடா), அப்துா் ரஹ்மான் (திரூா்) உள்ளிட்டோரும் தோல்வியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.