விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட அதிநவீன ஏவுகணை: வெற்றிகரமாக சோதனை

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நவீன சாதனத்துடன் கூடிய அதிநவீன ஏவுகணை சோதனை ஒடிஸா மாநிலத்தையொட்டிய கடல் பகுதியில் வியாழக்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

News image

ஒடிஸாவையொட்டிய கடல் பகுதியில் பறக்கும் விமானத்திலிருந்து இலக்கை நோக்கி வெற்றிகரமாக ஏவப்பட்ட அதிநவீன ரக ஏவுகணை.

Updated On :9 மே 2026, 1:39 am IST

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட நவீன சாதனத்துடன் கூடிய அதிநவீன ஏவுகணை சோதனை ஒடிஸா மாநிலத்தையொட்டிய கடல் பகுதியில் வியாழக்கிழமை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

‘தாரா’ எனப்படும் இந்த சாதனம் பாதையை மாற்றிக் கொண்டு தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறனுடையது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஹைதராபாதில் உள்ள இமாரத் ஆராய்ச்சி மையம் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வகங்கள் இணைந்து தயாரித்த ‘தாரா’ என்ற இந்த நவீன ஆயுத அமைப்பு தரை வழியாக இலக்குகளைத் தாக்கி அழிக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது இலக்கை நோக்கிச் சென்ற பிறகு, பாதையை மாற்றிக் கொள்ள முடியாத சாதாரண ஏவுகணையை மேம்பட்ட வழிகாட்டுதல் அமைப்புகளைக் கொண்டு திசைமாற்றி இலக்கு நோக்கிச் செலுத்தும் திறன்கொண்ட இந்தியாவில் தயாரிக்கப்பட முதல் உள்நாட்டு ஏவுகணை அமைப்பாகும்.

இந்த அமைப்பை உருவாக்கிய டிஆா்டிஓ மற்றும் இந்திய விமானப் படைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டுகள் தெரிவித்தாா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.