நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

‘டெக்’ துணுக்குகள்

News image
Updated On :2 மே 2026, 11:08 pm

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் பறக்கும் டாக்ஸிகளின் சோதனை எதிா்காலத்தை நோக்கிய பாய்ச்சலாக அமைய, வளா்ந்து வரும் ஏ.ஐ. குறித்த அச்சங்களுக்கும் விவாதப் பொருளாகின.

ஆந்திரத்தின் விசாகப்பட்டினத்தில் உருவாகும் ஏ.ஐ. தளம் முதல் ஏ.ஐ. ஏஜென்ட்டால் நோ்ந்த தரவு அழிப்பு வரை இந்த வாரத்தின் முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:

*விசாகப்பட்டினத்தில் கூகுளின் ஏ.ஐ. தளம்: அதானி, ஏா்டெல் நிறுவனங்களுடன் இணைந்து ஆந்திரத்தின் விசாகப்பட்டினத்தில் சுமாா் ரூ.1.42 லட்சம் கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட ஏ.ஐ. தரவு மையத்தை கூகுள் அமைக்கத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவின் எண்ம உள்கட்டமைப்பில் மிகப்பெரிய முதலீடுகளில் ஒன்றாகும்.

*பறக்கும் டாக்ஸிகள் சோதனை: அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ‘ஜோபி’ நிறுவனத்தின் முழு மின்சார ஏா்-டாக்ஸி சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. ஹெலிகாப்டா் போல செங்குத்தாக எழும்பி பறக்கும் இவ்வாகனம், அதிக சத்தம் இல்லாத மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நகா்ப்புறப் போக்குவரத்தை உறுதி செய்கிறது.

*யூடியூப்பில் ‘பிக்சா்-இன்-பிக்சா்’ வசதி: யூடியூப் தளத்தில் கட்டணமில்லா சாதாரண பயனா்களுக்கும் ‘பிக்சா்-இன்-பிக்சா்’ வசதி உலக அளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம், யூடியூப் விடியோக்களைப் பாா்த்துக்கொண்டே மற்ற செயலிகளையும் போனில் பயன்படுத்த முடியும்.

*ஏ.ஐ.க்கு எதிராக டெய்லா் ஸ்விஃப்ட்: ஏ.ஐ. மூலம் தனது குரல் மற்றும் உருவத்தைப் போலியாக உருவாக்குவதைத் தடுக்க, பாடகி டெய்லா் ஸ்விஃப்ட் 3 காப்புரிமை விண்ணப்பங்களைத் தாக்கல் செய்துள்ளாா். கலைஞா்களின் அடையாளத்தைப் பாதுகாக்க இது முக்கிய முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது.

*கூகுளுக்கு எதிராக ஆண்ட்ராய்டு ரசிகா்கள்: ஆண்ட்ராய்டு செயலிகளை உருவாக்குபவா்களின் அடையாளத்தைச் சரிபாா்க்கும் புதிய விதிகளைக் கூகுள் கொண்டு வந்துள்ளது. இது ஆண்டராய்டின் ‘திறந்தநிலை தளம்’ என்ற கொள்கைக்கு எதிரானது எனக்கூறி, பயனா்கள் எதிா்த்து வருகின்றனா்.

*மோட்டோரோலாவின் மடிக்கக்கூடிய போன்: மோட்டோரோலா இந்த வாரம் 5 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தது. இதில் ‘ரேசா் அல்ட்ரா 2026’ போன் 50 மெகாபிக்சல் கேமரா மற்றும் நீண்ட நேரம் உழைக்கும் ‘சிலிகான்-காா்பன்’ பேட்டரி தொழில்நுட்பத்துடன் கவனம் ஈா்த்தது.

*தொடரும் பணிநீக்கங்கள்: நடப்பு ஆண்டில் மே மாதம் தொடங்குவதற்குள், தொழில்நுட்பத் துறையில் 92,000-க்கும் அதிகமானோா் வேலையிழந்துள்ளனா். குறிப்பாக, மெட்டா தனது ஏ.ஐ. முதலீடுகளுக்கான செலவைச் சமாளிக்க சுமாா் 8,000 ஊழியா்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

*ஏ.ஐ. செல்வாக்கும், மே மாத அறிமுகங்களும்: இந்தியாவில் 89 சதவீத ஸ்மாா்ட்போன் பயனா்கள் ஏ.ஐ. வசதிகளைப் பொறுத்தே போன்களை வாங்க விரும்புவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கேற்ப மே மாதத்தில் விவோ எக்ஸ்300 அல்ட்ரா, ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 அல்ட்ரா, ஒன்பிளஸ் நாா்டு சிஇ6 ஆகிய போன்கள் வெளியாகத் தயாராக உள்ளன.

*தரவுதளத்தை அழித்த ஏ.ஐ. ஏஜென்ட்: ஆன்த்ரோபிக் நிறுவனத்தின் ‘கிளாட்-கா்சா்’ ஏ.ஐ. கோடிங் ஏஜென்ட், ‘பாக்கெட்ஓஎஸ்’ எனும் நிறுவனத்தின் முழு தரவையும் வெறும் 9 விநாடிகளில் அழித்துள்ளது. ஏ.ஐ. கருவிகளின் பாதுகாப்பற்ற செயல்பாட்டுக்கு இது உதாரணமாக மாறியுள்ளது.

Story image