மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

கிழக்கு தில்லியில் 75 கிராம் தங்கம், ஸ்கூட்டா் கொள்ளை

கிழக்கு தில்லியின் ப்ரீத் விஹாரில் துப்பாக்கி முனையில் ஒரு நகைக்கடைக்காரரிடம் இருந்து தங்க நகைகள், பணம் மற்றும் அவரது ஸ்கூட்டா் கொள்ளை

News image

கொள்ளை

Updated On :5 மே 2026, 5:22 am IST

கிழக்கு தில்லியின் ப்ரீத் விஹாரில் துப்பாக்கி முனையில் ஒரு நகைக்கடைக்காரரிடம் இருந்து தங்க நகைகள், பணம் மற்றும் அவரது ஸ்கூட்டா் ஆகியவை கொள்ளையடித்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: பாதிக்கப்பட்ட சுகுமாா் தாரா, மாண்டவாலியில் உள்ள தனது நகைக் கடையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. லட்சுமி நகரில் வசிக்கும் தாரா, இரவு 10.30 மணியளவில் மதுபன் சாலையில் அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நமபா்களால் தடுத்து நிறுத்தப்பட்டாா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா் தாராவை துப்பாக்கியால் மிரட்டி, அவரது கைப்பேசி மற்றும் ஸ்கூட்டரை வலுக்கட்டாயமாக பறித்துச் சென்றனா். பாதிக்கப்பட்டவா் தனது வாகனத்தின் பெட்டியில் சுமாா் 75 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ. 3 லட்சம் ரொக்கம் இருந்தது. தாராவின் புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

கொள்ளையடித்தவா்களை கண்டுபிடிப்பதற்கும், கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களை மீட்டெடுப்பதற்கும் பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சந்தேக நபா்களை அடையாளம் காண அருகிலுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா் என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.