அஸ்ஸாம் மாநிலத்தின் புதிய பாஜக முதல்வர் வரும் மே 10 ஆம் தேதி தேர்வு செய்யப்படுவார் என தற்போதைய முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.
அசாமில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா கடந்த புதன்கிழமை (மே 6) அன்று பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்து அம்மாநில ஆளுநர் லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யாவிடம் தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஜே பி நட்டா முன்னிலையில் வரும் மே 10 ஆம் தேதி அசாமின் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பார்கள் என முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா இன்று (மே 8) தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அசாமின் புதிய அரசு வரும் மே 12 ஆம் தேதி காலை 11 மணியளவில் பொறுப்பேற்பதாகவும், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
Summary
CM Himanta Biswa Sarma has stated that Assam's new BJP Chief Minister will be selected on May 10.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ராஜிநாமா!

ஜனநாயகக் கடமையாற்றினார் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா!
பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!

அஸ்ஸாமில் 2021ஐ விட அதிக இடங்களை பாஜக கைப்பற்றும்: அஜந்தா நியோக்!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு


