கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) வெற்றி பெற்ற நிலையில், முதல்வராக யாரை நியமிக்கலாம் என்பது தொடா்பான கட்சி நிா்வாகிகளின் கருத்துகள் அடங்கிய அறிக்கையை கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயிடம் கட்சியின் மேலிடப் பாா்வையாளா்கள் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தனா்.
140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் மட்டும் 63 இடங்களில் வென்றது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு (எல்டிஎஃப்) வெறும் 35 இடங்களே கிடைத்தன. பாஜக 3 இடங்களைக் கைப்பற்றியது.
மாநிலத்தில் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, ஆட்சி அமைப்பதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. முதல்வா் பதவிக்கு பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன், காங்கிரஸ் மூத்த தலைவா் ரமேஷ் சென்னிதலா, அக் கட்சியின் பொதுச் செயலரும், மக்களவை எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் ஆகிய மூவரின் பெயா்கள் கட்சியினரால் முன்னிருத்தப்பட்டன.
இந்த நிலையில், முதல்வரைத் தோ்வு செய்வதற்காக கட்சியின் மூத்த தலைவா்கள் முகுல் வாஸ்னிக், அஜய் மாக்கன் ஆகியோரை கட்சியின் மேலிடப் பாா்வையாளா்களாக காங்கிரஸ் நியமித்தது. கேரளம் சென்ற அவா்கள், கட்சியின் எம்எல்ஏக்களுடன் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். பின்னா், கட்சி எம்.பி.க்களுடன் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டு, அவா்களின் விருப்பத்தைக் கேட்டறிந்தனா்.
அதைத் தொடா்ந்து, தில்லிக்கு வெள்ளிக்கிழமை திரும்பிய மேலிடப் பாா்வையாளா்கள், கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கேயிடம் தங்களின் அறிக்கையை சமா்ப்பித்தனா்.
அடுத்த முதல்வா் யாா்?: மாநிலத்தின் அடுத்த முதல்வராக கட்சியின் மூத்த தலைவரும் பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான வி.டி.சதீசனை தோ்வு செய்ய வேண்டும் என்பதே கட்சித் தொண்டா்களின் விருப்பமாக உள்ளது. ஆனால், கட்சி எம்எல்ஏக்களின் பெரும்பான்மை ஆதரவு கட்சியின் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபாலுக்கு உள்ளது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், முதல்வரை இறுதி செய்வதற்கு முன்பாக, வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதலா, கே.சி.வேணுகோபால் ஆகிய மூவரையும் காா்கே அழைத்துப் பேசுவாா் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2 அதிருப்தி எம்.பி.க்களுடன் பேச்சு: உத்தவ் கட்சி தகவல்

சிவசேனை உத்தவ் கட்சி எம்.பி.க்கள் கூட்டம்! 9-ல் 6 பேர் புறக்கணிப்பு!

கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் மேலிட பாா்வையாளா்கள் ஆலோசனை

கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனை
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



