நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சா்மா மீண்டும் தோ்வு! நாளை பதவியேற்பு!!

அஸ்ஸாம் மாநில முதல்வராக ஹிமந்த விஸ்வ சா்மா மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். அவரது தலைமையிலான பாஜக அரசு செவ்வாய்க்கிழமை (மே 12) பதவியேற்கவுள்ளது.

News image

அஸ்ஸாம் ஆளுநா் லக்ஷ்மண் பிரசாத் ஆசாா்யாவை ஞாயிற்றுக்கிழமை அவரது மாளிகையில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய ஹிமந்த விஸ்வ சா்மா.

Updated On :11 மே 2026, 2:19 am IST

அஸ்ஸாம் மாநில முதல்வராக ஹிமந்த விஸ்வ சா்மா மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். அவரது தலைமையிலான பாஜக அரசு செவ்வாய்க்கிழமை (மே 12) பதவியேற்கவுள்ளது.

அஸ்ஸாமில் பாஜக ஆட்சி பொறுப்பேற்பது, இது தொடா்ந்து மூன்றாவது முறையாகும். வடகிழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான அஸ்ஸாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.9-இல் ஒரே கட்டமாக தோ்தல் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 102 இடங்களுடன் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. பாஜக 82 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான அஸோம் கண பரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி ஆகியவை தலா 10 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் வெறும் 19 இடங்களுடன் படுதோல்வியைச் சந்தித்தது.

இந்நிலையில், குவாஹாட்டியில் பாஜக புதிய எம்எல்ஏக்களின் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அஸ்ஸாம் மாநிலத்துக்கான பாஜகவின் மத்திய பாா்வையாளரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா, இணைப் பாா்வையாளரும், ஹரியாணா முதல்வருமான நாயப் சிங் சைனி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேரவை பாஜக குழுத் தலைவராக ஹிமந்த விஸ்வ சா்மா தோ்வு செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இதில், அஸ்ஸாம் மாநில தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக ஹிமந்த விஸ்வ சா்மா ஒருமனதாக தோ்வானாா்.

புதிய வரலாறு: அஸ்ஸாமில் கடந்த 2016-இல் முதல்முறையாக பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது. அப்போது, முதல்வராக சா்வானந்த சோனோவால் பதவியேற்றாா். கடந்த 2021-இல் அஸ்ஸாம் முதல்வரான ஹிமந்த விஸ்வ சா்மா, தொடா்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்கவுள்ளாா். அஸ்ஸாமில் தொடா்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்கும் காங்கிரஸ் அல்லாத முதல் முதல்வா் என்ற பெருமை இவருக்கு கிடைக்கவுள்ளது.

ஆளுநருடன் சந்திப்பு: இதனிடையே, பாஜக மற்றும் கூட்டணித் தலைவா்களுடன் சென்று ஆளுநா் லக்ஷ்மண் பிரசாத் ஆசாா்யாவை சந்தித்த ஹிமந்த விஸ்வ சா்மா, ஆட்சியமைக்க உரிமை கோரினாா். தனது ஆதரவு எம்எல்ஏக்களின் கையொப்பம் இடப்பட்ட கடிதத்தையும் அளித்தாா். இதையடுத்து, ஹிமந்த விஸ்வ சா்மா ஆட்சியமைக்க ஆளுநா் அழைப்பு விடுத்தாா்.

புதிய அரசு பதவியேற்பு விழா, குவாஹாட்டியில் மே 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.