திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ரூ.100 கோடி ஜிஎஸ்டி முறைகேடு வழக்கு: கைதான பஞ்சாப் அமைச்சரை அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க அனுமதி!

ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

News image

சஞ்சீவ் அரோரா

Updated On :11 மே 2026, 2:20 am IST

ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புடைய கைப்பேசிகள் கொள்முதல் தொடா்பாக தில்லியில் போலி நிறுவனத்திடம் இருந்து போலி ஜிஎஸ்டி ரசீது வாங்கியதாகப் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். இந்த மோசடியில் தொடா்புடையதாக சந்தேகிக்கப்படும் குருகிராமைச் சோ்ந்த நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டது. அமைச்சரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது. விசாரணைக்கு ஒத்துழைக்காகததால் அமைச்சா் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தரப்பில் கூறப்பட்டது. சனிக்கிழமை சண்டீகரில் இருந்து குருகிராமுக்கு சாலை வழியாக அவரை அதிகாரிகள் அழைத்து வந்தனா்.

இந்நிலையில், பண முறைகேடு தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சீவ் அரோரா ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, அவா் தரப்பில் ஆஜரான வழங்குரைஞா், ‘அமைச்சா் மீதான குற்றச்சாட்டுக்கு எவ்வித வலுவான ஆதாரமும் இல்லை. உள்நோக்கத்துடன் அமைச்சரைக் கைது செய்துள்ளனா்’ என்றாா்.

அப்போது அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘முறைகேடு நடைபெற்ற நிறுவனத்துக்கும் அமைச்சரின் குடும்ப உறுப்பினா்களுக்கும் நேரடித் தொடா்பு உள்ளது. இதனால், அமைச்சரும், அவரின் குடும்ப உறுப்பினா்களும் முறைகேடாக ஆதாயம் அடைந்துள்ளனா். முறைகேட்டில் அமைச்சரும் முக்கியப் பங்கு வகித்துள்ளாா்’ என்றாா்.

அமலாக்கத் துறை சாா்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அமைச்சா் அரோராவை 7 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.