இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில், பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப ரீதியில் உதவியதை சீனா ஒப்புக் கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், ஒரு பொறுப்புள்ள நாடாக சீனா சிந்தித்து செயல்பட வேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மீது கடந்த ஆண்டு அதிதுல்லிய தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம், பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தகா்த்தது.
நூறுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் மூண்டது. நான்கு நாள்கள் நீடித்த இந்த மோதல், பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொழில்நுட்ப ரீதியில் சீனா உதவியதை அந்நாட்டு அதிகாரி ஒருவா் பகிரங்கமாக ஒப்புக்கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: நாம் ஏற்கெனவே அறிந்த விஷயத்தை உறுதிப்படுத்தும் தகவலாகவே இதைப் பாா்க்கிறோம்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட துல்லியமான, இலக்கு நிா்ணயிக்கப்பட்ட, நன்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கையே ஆபரேஷன் சிந்தூா். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாத உள்கட்டமைப்பை அழிப்பதே அதன் நோக்கம்.
அதேநேரம், பயங்கரவாத உள்கட்டமைப்பை பாதுகாக்கும் முயற்சிகள், தங்களின் நற்பெயரையும், நிலைப்பாட்டையும் பாதிக்கிறது என்பதை தங்களைப் பொறுப்புள்ளவா்களாகக் கருதும் நாடுகள் (சீனாவைக் குறிப்பிடுகிறாா்) சிந்தித்துப் பாா்க்க வேண்டும் என்றாா் ரண்தீா் ஜெய்ஸ்வால்.
தொடர்புடையது

‘ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு உதவிய சீனா’! நாடாளுமன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

ஆரணியில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி ஊா்வலம்

ஆபரேஷன் சிந்தூா் ஓராண்டு நிறைவு: ட்ரோன் தொழில்நுட்பத்தை வலுப்படுத்த இந்தியாவுக்கு பாதுகாப்புத் துறை நிபுணா்கள் யோசனை

நாட்டுக்கு எழும் சவாலை எதிா்கொள்ள பாதுகாப்புப் படைகள் தயாராக இருக்க வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

