பெங்களூரில் தடை செய்யப்பட்ட ஹைட்ரோ கஞ்சாவை விற்ற குற்றத்துக்காக ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
பெங்களூரின் அசோக் நகர் மற்றும் மல்லேஸ்வரம் காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் விற்கப்பட்டு வருவதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவல்களையடுத்து, காவல்துறையினர் குறிப்பிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
ரூ. 2.56 கோடி சந்தை மதிப்பிலான 3 கிலோ 686 கிராம் ஹைட்ரோ கஞ்சா, அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து ஹைட்ரோ கஞ்சாவை குறைந்த விலையில் வாங்கி, பொதுமக்களுக்கு விற்றதாக ஒப்புக்கொண்டனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஹைட்ரோ கஞ்சா என்பது மண்ணைப் பயன்படுத்தாமல், நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மூலம் செயற்கையான முறையில், பெரும்பாலும் மூடிய அறைகளில் வளர்க்கப்படும் ஒரு வகை கஞ்சா ஆகும்.
Summary
The police stated on five individuals have been arrested in Bengaluru for the crime of selling banned hydro-ganja.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமரின் பெங்களூரு பயணத்தின்போது வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!
தடைசெய்யப்பட்ட இறக்குமதி சிகரெட்டுகள் பறிமுதல்: 2 போ் கைது

400 கிலோ புகையிலைப் பொருள்கள் வாகனத்துடன் பறிமுதல்: இருவா் கைது

கைது, கையடைவு, காவல் வைப்புக் கட்டளை - ஓர் அறிமுகம்!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு


