நீட் மறுதேர்வுக்கு கட்டணம் இல்லை! செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும்! மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து! மே 3-ல் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு ரத்து: தேசிய தேர்வு முகமைஅதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா பதவியேற்பு!

அஸ்ஸாமின் முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றுக்கொண்டார்.

News image

ஹிமந்த பிஸ்வ சர்மா பதவியேற்பு - x.com

Updated On :1 மணி நேரம் முன்பு

அஸ்ஸாமின் முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா இரண்டாவது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டார். 

குவாஹாட்டியின் கானாபாரா பகுதியில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில், ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, ஹிம்ந்த பிஸ்வ சர்மாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களான அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சர்பானந்த சோனோவால், பவித்ரா மார்கரிட்டா, பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணை முதலமைச்சர்கள், பாஜக தலைவர் நிதின் நவீன் ஆகியோரும் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர்.

126 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாமில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாஜக 82 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சிகள் 20 இடங்களையும் கைப்பற்றின. வெறும் 19 இடங்களுடன் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. 

இந்த நிலையில், குவாஹாட்டியில் வெற்றி பெற்ற பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஹிமந்த பிஸ்வ சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து பாஜக தலைமையிலான தேஜ கூட்டணியின் தலைவராகவும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இதைத்தொடர்ந்து மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக ஹிமந்த பிஸ்வ பொறுப்பேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார். 

இதையடுத்து, பதவியேற்பு விழாவில் அவரது குடும்பமான முதல்வரின் தாயார் மிருணாலினி தேவி, மனைவி ரினிகி புயான் சர்மா, மகன் நந்தில் பிஸ்வா சர்மா, மகள் சுகன்யா சர்மா ஆகியோரும் இந்நிகழ்வில் உடனிருந்தனர்.

Summary

Himanta Biswa Sarma was sworn in as the chief minister of Assam for the second consecutive term on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.