தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

அஸ்ஸாம் முதல்வராக மே 12ல் பதவியேற்கிறார் ஹிமந்த பிஸ்வ சர்மா!

அஸ்ஸாமின் முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா மே 12ஆம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ளார்.

News image

ஹிமந்த பிஸ்வ சர்மா - பிடிஐ

Updated On :10 மே 2026, 2:51 pm IST

அஸ்ஸாமின் முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா மே 12ஆம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ளார்.

126 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாமில் பாஜக தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாஜக 82 இடங்களையும், அதன் கூட்டணி கட்சிகள் 20 இடங்களையும் கைப்பற்றின. வெறும் 19 இடங்களுடன் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது.

இந்த நிலையில் குவாஹாட்டியில் வெற்றி பெற்ற பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஹிமந்த பிஸ்வ சர்மா ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து பாஜக தலைமையிலான தேஜ கூட்டணியின் தலைவராகவும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக ஹிமந்த பிஸ்வ பொறுப்பேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்தார். அதேசமயம் முதல்வராக ஹிமந்த பிஸ்வ சர்மா மே 12ஆம் தேதி மீண்டும் பதவியேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேஜ கூட்டணி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சட்டப்பேரவை உறுப்பினர்களிடையே உரையாற்றிய ஹிமந்த பிஸ்வா சர்மா, கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் மக்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். மேலும், ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாகவும் அவர் கூறினார்.

Summary

Himanta Biswa Sarma was elected as the leader of the BJP-led NDA in the Assam assembly on Sunday, paving the way for him to become the chief minister for the second consecutive term in the state, Union minister J P Nadda said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.