ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

குகி, நாகா சமூகங்களைச் சேர்ந்த 38 பேர் சிறைப்பிடிப்பு! - மணிப்பூர் அரசு அறிவிப்பு!

மணிப்பூரில் 38 பேர் பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டது குறித்து...

 38 people of Kuki, Naga communities held hostage by various groups

மணிப்பூரில் 38 பேர் சிறைப்பிடிப்பு... - கோப்புப் படம்

Published On :

மணிப்பூரில், நாகா மற்றும் குகி சமூகங்களைச் சேர்ந்த 38 பேர் பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக, அம்மாநில உள்துறை அமைச்சர் கோவிந்தாஸ் கோந்தௌஜம் தெரிவித்துள்ளார்.

காங்போக்பி மாவட்டத்தில், கடந்த புதன்கிழமை (மே 13) அன்று அடையாளம் தெரியாத தீவிரவாதக் குழுவினர் நடத்திய தாக்குதலில் தேவாலயத்தின் தலைவர்கள் 3 பேர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில், குகி மற்றும் நாகா சமூகங்களைச் சேர்ந்த சுமார் 38 பேர் வெவ்வேறு குழுக்களால் பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டதாகவும், அவர்களை விடுதலை செய்வது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மணிப்பூரின் உள்துறை அமைச்சர் கோந்தௌஜம் இன்று (மே 14) அறிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளோம். சிறைப்பிடிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, உள்ளூர்வாசிகள் சிறைப்பிடிக்கப்பட்டது மற்றும் தேவாலய தலைவர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து மணிப்பூரின் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், காங்போக்பி, சூராசந்திரப்பூர் மற்றும் சாண்டேல் ஆகிய மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Summary

Manipur's Home Minister, has stated that 38 individuals belonging to the Naga and Kuki communities are being held as hostages.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.