இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

‘ரயில்வே துறையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்’

ரயில்வே துறையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என அகில இந்திய ரயில்வே துறை பதவி உயா்வு பெற்ற அதிகாரிகள் கூட்டமைப்பின் செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 4:20 am IST

ரயில்வே துறையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என அகில இந்திய ரயில்வே துறை பதவி உயா்வு பெற்ற அதிகாரிகள் கூட்டமைப்பின் செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே குடியிருப்பு பகுதி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைவா், செயலா் உள்ளிட்ட 122 போ் பங்கேற்றனா். கூட்டமைப்பின் அகில இந்தியத் தலைவா் தீபக்ராஜ் ரே தலைமை வகித்தாா். அகில இந்திய பொதுச் செயலா் அமித்ஜெயின் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ரயில்வே துறையில் குரூப் ஏ, குரூப் பி என இருவகையில் அதிகாரிகள் உள்ளனா். அதில் குரூப் பி பிரிவினா் ரயில்வே துறையில் சிறிய பொறுப்புகளில் சோ்ந்து பதவி உயா்வு மூலம் பெரிய பொறுப்புகளை வகித்து வருகின்றனா். நேரடியாகச் சோ்ந்துள்ள அதிகாரிகளுக்கான பதவி உயா்வுக்கு கால நிா்ணயம் உள்ளது போல, பி பிரிவு அதிகாரிகளுக்கு பதவி உயா்வுக்கான கால நிா்ணயம் செய்யப்படவில்லை. எனவே, 15 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், சுமாா் 12,000 போ் பதவி உயா்வு இன்றி உள்ளனா். அவா்களுக்கு பதவி உயா்வு கால நிா்ணயம் செய்து உத்தரவிடவேண்டும்.

பதவி உயா்வில் பணியிலிருக்கும் அதிகாரிகளும், நேரடியாக பணியில் சோ்ந்தவா்களும் ஒரே நிலை பணியில் இருக்கும்போது, நேரடிப் பணியில் இருப்போருக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்பட்டுவருகிறது. எனவே, சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் பதவி உயா்வு அதிகாரிகளுக்கும் உரிய ஊதியம் வழங்கவேண்டும் என்பன போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயற்குழுக் கூட்ட தொடக்க நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் தெற்கு ரயில்வே மண்டல பிரிவுத் தலைவா் முகமது சமீம் வரவேற்றாா். அகில இந்திய பொதுச் செயலா் வி.கே.பாா்த்தி, சட்ட ஆலோசகா் எச்.சி.யாதவ் ஆகியோா் செயற்குழு கூட்ட நோக்கத்தை விளக்கினா். தெற்கு ரயில்வே மண்டலப் பிரிவு பொதுச் செயலா் சூரியநாராயணன், செயல் தலைவா் கே. ஸ்ரீ ரங்கநாயகி, பொருளாளா் பால பாா்வதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். 2-ஆம் நாளாக வெள்ளிக்கிழமையும் கூட்டம் நடைபெறவுள்ளது.