12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஏற்றுமதிக்குத் தடை! சர்க்கரை ஆலை நிறுவனங்களின் பங்குகள் 7% சரிவு

சர்க்கரை ஏற்றுமதிக்குத் தடை காரணமாக, சர்க்கரை நிறுவனங்களின் பங்குகள் சரிவு

Sugar stocks turn sour

சர்க்கரை ஆலை நிறுவனங்களின் பங்குகள் சரிவு - ENS

Published On :

சர்க்கரை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக, சர்க்கரை நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன.

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படுவதை செப். 30 வரையில் மத்திய அரசு தடை செய்து உத்தரவிட்டது.

மத்திய அரசின் தடை காரணமாக, இன்றைய பங்குச்சந்தையில் சர்க்கரை ஆலை நிறுவனங்களின் பங்குகள் இன்று (மே 14) 7 சதவிகிதம்வரையில் சரிந்தன.

மும்பை பங்குச்சந்தையில் தாம்பூர் சர்க்கரை ஆலையின் பங்குகள் 6.95 சதவிகிதமும், துவாரிகேஷ் சர்க்கரை தொழிற்சாலைகளின் பங்குகள் 6.65 சதவிகிதமும், உத்தம் சர்க்கரை தொழிற்சாலைகள் 5.60 சதவிகிதமும், பஜாஜ் இந்துஸ்தான் சர்க்கரை ஆலை 4.95 சதவிகிதமும், மவானா சர்க்கரை ஆலை 4.83 சதவிகிதமும், டால்மியா பாரத் சர்க்கரை தொழிற்சாலை 3.98 சதவிகிதமும் சரிந்துள்ளன.

தொடர்ந்து, திரிவேணி இன்ஜினியரிங் அன்ட் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3.85 சதவிகிதமும், ராஜ்ஸ்ரீ சர்க்கரை அன்ட் கெமிக்கல்ஸ் 3.42 சதவிகிதமும், சக்தி சர்க்கரை ஆலை 2.92 சதவிகிதமும். பல்ராம்பூர் சின்னி மில்ஸ் 2.52 சதவிகிதமும், ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் 2.13 சதவிகிதமும், அவாத் சுகர் அன்ட் எனர்ஜியின் பங்குகள் 1.76 சதவிகிதமும், இஐடி பாரி இந்தியாவின் பங்குகள் 1.64 சதவிகிதமும் சரிந்தன.

அதுமட்டுமின்றி, நேற்றைய (மே 13) வர்த்தக நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 95.71 ஆக இருந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை வர்த்தக நேர தொடக்கத்தில் 95.73 ஆக இருந்தது.

அதிகபட்சமாக இன்றைய வர்த்தக நேர இடையே 95.85 ஆக மேலும் சரிந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பின் அதிகபட்ச சரிவு இதுவாகும்.

Summary

Sugar stocks turn sour after govt ban exports till September

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.