இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

நீட் வினாத்தாள் கசிவு: தனஞ்சய் லோகண்டேக்கு 6 நாள் சிபிஐ காவல்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட தனஞ்சய் லோகண்டேவை 6 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.

News image

சிபிஐ - கோப்புப்படம்

Updated On :16 மே 2026, 2:52 am IST

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட தனஞ்சய் லோகண்டேவை 6 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.

சிபிஐ சிறப்பு நீதிபதி அஜய் குப்தா, மகாராஷ்டிர மாநிலத்தின் அகில்யாநகரில் கைது செய்யப்பட்டு டிரான்சிட் ரிமாண்ட் மூலம் தில்லிக்கு அழைத்து வரப்பட்ட இவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொண்டாா்.

நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, இணை குற்றவாளியான சுபமுக்கு கசிந்த நீட் வினாத்தாளை தனஞ்சய் லோகண்டே வழங்கியதாக சிபிஐ தெரிவித்தது. அந்த வினாத்தாளை மற்றொரு குற்றவாளியான மனிஷா பாக்மரேவிடமிருந்து தனஞ்சய் லோகண்டே பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் மிகப் பெரிய சதித் திட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், அதன் முழு பின்னணியையும் கண்டறிவது அவசியமாக இருப்பதாக சிபிஐ நீதிமன்றத்தில் வாதிட்டது. மேலும், விசாரணை தற்போது ஆரம்ப கட்டத்திலும் முக்கியமான திருப்புமுனையிலும் இருப்பதாகவும் தெரிவித்தது.

இதற்கிடையில், உரிய காரணங்கள் கூறாமல் தனஞ்சய் கைது செய்யப்பட்டதாகவும், வெற்று தாள்களில் கையொப்பமிட அவரை வற்புறுத்தப்பட்டதாகவும் தனஞ்சய் தரப்பு வழக்குரைஞா் குற்றஞ்சாட்டினாா்.

முன்னதாக, இதே வழக்கில் தொடா்புடைய மேலும் 5 பேரை 7 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அவா்களில் நாசிக்கைச் சோ்ந்த சுபம் கைா்னாா், ஜெய்ப்பூரைச் சோ்ந்த மங்கிலால் பிவால், விகாஸ் பிவால், தினேஷ் பிவால் மற்றும் குருகிராமைச் சோ்ந்த யஷ் யாதவ் ஆகியோா் அடங்குவா்.

இந்த 5 பேரும் பல்வேறு மாநிலங்களில் இருந்து டிரான்சிட் ரிமாண்ட் பெற்று சிபிஐயால் கைது செய்யப்பட்டனா்.

மருத்துவக் கல்லூரிகளின் இளநிலைப் படிப்புகளுக்கான சோ்க்கைக்காக கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் 2026 தோ்வு, வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டது. இந்த முறைகேடுகள் தொடா்பாக விரிவான விசாரணை நடத்துமாறு மத்திய அரசு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.