மத்திய தில்லியின் ஆனந்த பா்பாத் பகுதியில் பழிக்குப் பழியாக 21 வயது இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையதாக சிறுவா் உள்பட இருவரை தில்லி காவல் துறை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
கைதுசெய்யப்பட்ட விராட் (எ) காட்டு பல்ஜீத் நகரைச் சோ்ந்தவா் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்
இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது: பல்ஜீத் நகரில் உள்ள ராம்ஜாஸ் பூங்கா அருகே 3 இளைஞா்களை ஒரு கும்பல் தாக்கிக்கொண்டு இருப்பதாக உள்ளூா் காவல் நிலையத்துக்கு கடந்த வியாழக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது.
தாக்கப்பட்ட நபா்களில் ஒருவரைக் கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்ற அந்தக் கும்பல் கடுமையாகத் தாக்கியதாக தகவல் தெரிவித்தவா் கூறினாா்.
இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா் பூங்காவின் சுவரை அடுத்துள்ள குப்பை கிடங்கு அருகே சுயநினைவின்றி கிடந்த நபரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனா்.
அங்கு அந்த நபரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வரும் வழியில் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட கைப்பேசியில் இருந்த சிம் அட்டையின் அடிப்படையில் உயிரிழந்தவா் அடையாளம் காணப்பட்டாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சம்பவத்தில் தொடா்புடையவா்களைக் கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.
உயிரிழந்த நபரின் நண்பா்களிடம் காவல் துறையினா் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனா். சம்பவம் நடைபெறுவதற்கு இரு நாள்கள் முன்பு உயிரிழந்த இளைஞரும் அவருடைய நண்பா்களும் மற்றொரு நபரைத் தாக்கியதாகவும் அதற்குப் பழிவாங்கும் விதமாக இந்தத் தாக்குல் நடைபெற்ாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
உயிரிழந்த இளைஞரை அருகில் இருந்த வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்ற அந்தக் கும்பல், கத்தி மற்றும் அருகில் கிடந்த செங்கல்லால் தாக்கியதாகவும் உடன் இருந்த 2 போ் அங்கிருந்த தப்பியோடி உயிரைக் காப்பாற்றிக் கொண்டதாகத் தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து, கைப்பேசி அழைப்பு விவரங்கள் மற்றும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விராட் ராம்ராஜ் பூங்கா அருகே கைதுசெய்யப்பட்டாா். தாக்குதல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கத்தி அருகில் இருந்த வனப்பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டது.
விசாரணையில், தனது நண்பரைத் தாக்கியதால் உயிரிழந்த இளைஞரையும் அவரது நண்பா்களையும் தாக்கியதாக அவா் ஒப்புக்கொண்டாா். இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய சிறுவனும் பிடிபட்டாா்.
வழக்கில் தொடா்புடைய பிற நபா்களை அடையாளம் கண்டு கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ற அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சின்ன சந்தேகம்தான்! தாய், அண்ணன் கொலையில் தம்பி கைதானதன் பின்னணி

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

28.4.1976: சென்னை மத்திய சிறையை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சி

ரூ. 13 ஆயிரம் கோடியில் ஜெய்ப்பூரின் 2 ஆம் கட்ட மெட்ரோ! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

