ஹைதராபாத் : தெலங்கானாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) நடைமுறை ஜூன் 15 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் பட்டியல் தயாரிப்பு பணி ஜூன் 15 - 24 வரை நடைபெறும் என்றும் ஜூன் 25 - ஜூலை 24 வரை வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்படும் என்றும் தெலங்கானா தலைமை தேர்தல் அதிகாரி சி. சுதர்ஷன் ரெட்டி சனிக்கிழமை(மே 16) தெரிவித்தார்.
மேற்கண்ட பணிகளில் சுமார் 35,000 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) மாநிலமெங்கிலும் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, ஜூலை 31 - ஆகஸ்ட் 30 வரை வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டு ஆட்சேபனைகள் இருப்பின் கேட்கப்படும் என்றும் இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 1-இல் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, எஸ்ஐஆர் நடவடிக்கையானது ஒன்றிணைந்த ஆந்திர பிரதேச மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன், கடந்த 2002-இல் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், 23 ஆண்டுகளுக்குப் பின் தெலங்கானா பகுதிகளில் மீண்டும் 2026-இல் எஸ்ஐஆர் நடைபெற உள்ளது.
Summary
SIR to begin in Telangana from June 15
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்சிஇஆர்டி பாடப்புத்தகத்தில் எஸ்ஐஆர் பற்றி பாடம் சேர்ப்பு!

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஜூன் 30 முதல் காகித நோட்டுகள் செல்லாதா? மத்திய அரசு விளக்கம்

தெலங்கானாவில் ஜூன் 15-ல் பள்ளிகள் திறப்பு!
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



