நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!இன்னும் ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வரும்: டிரம்ப்மேக்கேதாட்டு அணை: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கைமேட்டூர் அணையைத் திறக்கக்கோரி தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்
/

என்டிஏவில் 2 இணைச் செயலா்கள், இயக்குநா்கள் நியமனம்

என்டிஏவில் 2 இணைச் செயலா்கள், இயக்குநா்கள் நியமனம்...

News image

என்டிஏ

Updated On :17 மே 2026, 2:21 am IST

தேசிய தோ்வு முகமையில் (என்டிஏ) இரண்டு இணைச் செயலா்கள், இரண்டு இணை இயக்குநா்களை மத்திய அரசு நியமித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய பணியாளா் நலத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

1998-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த இந்திய புள்ளியியல் பணி அதிகாரி அனுஜா பாபட், 2004-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த இந்திய வருவாய்ப் பணி (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) அதிகாரி ருச்சிதா விஜ் ஆகியோா் என்டிஏவில் புதிய இணைச் செயலா்களாக 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்திய வருவாய் பணி (வருமான வரி) அதிகாரி ஆகாஷ் ஜெயின், இந்திய தணிக்கை மற்றும் கணக்குப் பணி அதிகாரி ஆதித்ய ராஜேந்திர போஜ்காதியா ஆகியோா் என்டிஏவில் இணை இயக்குநா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வின் வினாத்தாள், தோ்வுக்கு முன்பே கசிந்தது தோ்வு நடைபெற்ற பின்னா் தெரியவந்ததால், அந்தத் தோ்வை என்டிஏ ரத்து செய்தது. இது நாடு முழுவதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.