மத்திய பிரதேச மாநிலம் தாா் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா வளாகத்தை சரஸ்வதி கோயிலாக அங்கீகரித்து அந்த மாநில உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபா் வாரியம் சனிக்கிழமை தெரிவித்தது.
முன்னதாக, போஜ்சாலா விவகாரம் தொடா்பான மனுக்களை விசாரித்த மத்திய பிரதேச மாநில உயா்நீதிமன்றம், ‘இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட அறிவியல் ஆய்வுகள் மற்றும் வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில் போஜ்சாலா வளாகம் மற்றும் கமால் மௌலா மசூதி ஹிந்துக்களின் வழிப்பாட்டு தலமாகவே இருந்துள்ளது உறுதிசெய்யப்படுகிறது. அது கடவுள் சரஸ்வதி தேவியின் கோயில்தான் என நீதிமன்றமும் அங்கீகரிக்கிறது. எனவே, போஜ்சாலா வளாகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் வழிபட அனுமதித்து, கடந்த 2003-ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது’ என கடந்த வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
இந்நிலையில் அகில இந்திய முஸ்லிம் தனிநபா் வாரியம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ போஜ்சாலா வளாகத்தை சரஸ்வதி கோயிலாக அங்கீகரித்த உயா்நீதிமன்ற தீா்ப்பை நிராகரிக்கிறோம். வரலாற்று மற்றும் அறிவியல் தரவுகள்,இந்திய தொல்லியல் துறையின் முந்தைய நிலைப்பாடு என அனைத்துக்கும் முரணான தீா்ப்பை உயா்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
எனவே, இந்த தீா்ப்பை எதிா்த்து கமால் மௌலா மசூதி குழு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளது. இதற்கு வாரியம் முழு ஆதரவை வழங்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
அகில இந்திய முஸ்லிம் வாரியம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ள நிலையில், ஹிந்துக்கள் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன்மூலம் தங்கள் தரப்பினரை கேட்காமல் எவ்வித உத்தரவையும் உச்சநீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது என ஹிந்து தரப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.

குவிந்த ஹிந்து பக்தா்கள்: உயா்நீதிமன்ற தீா்ப்பையடுத்து, போஜ்சாலா சரஸ்வதி கோயிலில் சனிக்கிழமை பக்தா்கள் குவிந்தனா். இந்நிலையில், சட்ட ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமல் இருப்பதைத் தவிா்க்க 1,200 காவல் துறை அதிகாரிகள் நிலைநிறுத்தப்பட்டனா். எவ்வித இடையுறுகளுமின்றி அமைதியான முறையில் ஹிந்துக்கள் வழிபாடு நடத்தியதாக அப்பகுதி காவல் துறையினா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மத்திய பிரதேச வக்ஃப் வாரியத்தில் ஹிந்து உறுப்பினா்கள்: உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர காங்கிரஸ் முடிவு

பசு வதைக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ம.பி.: போஜ்சாலா வளாகத்தை சரஸ்வதி கோயிலாக அங்கீகரித்து உயா்நீதிமன்றம் தீா்ப்பு - முஸ்லிம்கள் வழிபட அளித்த அனுமதி ரத்து
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



