சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பெங்களூருக்கு புதிய விரைவு ரயில்! கட்டணம், வழித்தடம், முழு விவரம்

பெங்களூரிலிருந்து மும்பைக்கு புதிய விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது, அதன் கட்டணம், வழித்தடம், முழு விவரம்

Express

விரைவு ரயில் (கோப்புப்படம்) - ANI

Published On :18 மே 2026, 1:46 pm IST

பெங்களூரிலிருந்து மும்பை வழித்தடத்தில் அவ்வப்போது சென்று வரும் மக்களுக்கு இனிப்பான செய்தியாக, புதிய விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விரு முக்கிய நகரங்களுக்கும், கடந்த 30 ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இரண்டாவது ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில் மற்றும் கல்விக்காக கர்நாடகத்திலிருந்து மகாராஷ்டிரத்துக்கு அடிக்கடி சென்று வரும் மக்களுக்கு இந்த ரயிலான வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த விரைவு ரயில் வாரத்தில் இரண்டு நாள்கள் இயக்கப்படும். பெங்களூரிலிருந்து செவ்வாய் மற்றும் சனிக்கிழமை தோறும் இரவு 8.35 மணியளவில் கிளம்பும். அடுத்த நாள் இரவு 8.40 மணிக்கு மும்பையை வந்தடையும்.

அடுத்து, மும்பையிலிருந்து ஞாயிறு மற்றும் புதன்கிமை தோறும் இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு அடுத்தநாள் பெங்களூர் சென்றடையும். இந்த ரயில் இரண்டு நகரங்களுக்கு இடையே பயணம் செய்ய முழுமையாக 24 மணி நேரம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் தேவநாகரி, தார்வாத், பெலகாவி, மிராஜ், சங்லி, கரத், புணே, தாணே என 15 முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மே 17ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும் பெங்களூரிலிருந்து ரயில் சேவை மே 23ஆம் தேதியிலிருந்தும், மும்பையிலிருந்து மே 24ஆம் தேதியும் ரயில் சேவை தொடங்கவிருக்கிறது.

படுக்கை வசதி கொண்ட டிக்கெட் ரூ.750, ஏசி-3 டயர் கட்டணம் ரூ.1880ஆகவும் ஏசி-2 டயர் கட்டணம் ரூ.2,575 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Summary

New express train to Bangalore Fare, route, full details

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.