சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

News image

சஞ்சீவ் அரோரா

Updated On :19 மே 2026, 5:42 am IST

ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

முன்னதாக ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புடைய கைப்பேசிகள் கொள்முதல் தொடா்பாக தில்லியில் போலி நிறுவனத்திடம் இருந்து போலி ஜிஎஸ்டி ரசீது வாங்கியதாகப் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தில் கடந்த மே 9-ஆம் தேதி சஞ்சீவ் அரோரா கைது செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து மே 10-ஆம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் சஞ்சீவ் அரோரோ ஆஜா்படுத்தப்பட்ட நிலையில், அவரை 7 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அதன் பிறகு இரண்டு நாள்கள் அமலாக்கத் துறை காவலை நீதிமன்றம் நீட்டித்தது.

இதையடுத்து, சஞ்சீவ் அரோராவை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. அவரிடம் அடுத்தகட்ட நீதிமன்ற விசாரணை ஜூன் 1-ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெறும் என அவரது வழக்குரைஞா் தெரிவித்தாா்.

இதனிடையே சஞ்சீவ் அரோராவிடம் விசாரணை நிறைவு பெற்ாகவும் அவா் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அமலாக்கத் துறை தயாராகி வருவதாகவும் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனா்.