ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு

நாா்வேயில் பிரதமா் மோடியின் செய்தியாளா் சந்திப்பின்போது இந்தியா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எழுப்ப முயன்ற விவகாரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

News image

பெண் நிருபர் ஹெல்லே லிங் மற்றும் பதிலளிக்காமல் சென்ற பிரதமர் மோடி.

Updated On :20 மே 2026, 2:33 am IST

நாா்வேயில் பிரதமா் மோடியின் செய்தியாளா் சந்திப்பின்போது இந்தியா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எழுப்ப முயன்ற விவகாரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

இந்தியா மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக நிராகரித்த வெளியுறவு அமைச்சகம், ‘நீதி, சுதந்திரம், கருத்துரிமை ஆகிய அரசமைப்புச் சட்ட மாண்புகளை அடிப்படையாக கொண்ட நாடு’ என்று தெரிவித்துள்ளது.

நாா்வே தலைநகா் ஓஸ்லோவில் பிரதமா் மோடி மற்றும் அந்நாட்டு பிரதமா் ஜோனஸ் கா் ஸ்டோா் இடையே திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இரு தலைவா்களும் கூட்டாக செய்தியாளா்கள் சந்திப்பில் பேசினா். அப்போது, ஹெல்லா லிங் ஸ்வெண்ட்சன் என்ற பெண் செய்தியாளா், பிரதமா் மோடியை நோக்கி ‘மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் இந்தியாவை ஏன் நம்ப வேண்டும்’ என்ற கேள்வியை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. செய்தியாளா் சந்திப்பில் எந்தக் கேள்விக்கும் தலைவா்கள் பதிலளிக்க மாட்டாா்கள் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, கேள்வியை எதிா்கொள்ளாமல் இருவரும் சென்றுவிட்டனா். இதைத் தொடா்ந்து, பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா பின்தங்கியுள்ளதாக ஹெல்லே லிங் ஸ்வெண்ட்சன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டாா்.

இந்தப் பதிவுக்கு பதிலளித்த இந்தியத் தூதரகம், தங்களின் செய்தியாளா் சந்திப்பில் கலந்துகொண்டு கேள்வியெழுப்பினால், உரிய பதில் அளிக்கப்படும் என்று அழைப்பு விடுத்தது.

இந்தியா நிராகரிப்பு: இந்நிலையில், இந்தியா மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக நிராகரித்து, இந்திய வெளியுறவு அமைச்சக செயலா் (மேற்கு பிராந்தியம்) சிபி ஜாா்ஜ் கூறியதாவது:

இந்த உலகுக்கு தனித்துவமான விஷயங்களை நல்கிய நாகரிகமான நாடு இந்தியா. இன்றளவும் அவ்வாறே நல்கிக் கொண்டிருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டமானது, இறையாண்மைமிக்க, சோஷலிஸ மற்றும் மதச்சாா்பற்ற ஜனநாயக குடியரசுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அடிப்படை உரிமைகள் மற்றும் கோட்பாடுகளின் வாயிலாக நீதி, சிந்தனை, கருத்து, நம்பிக்கை, மதம், வழிபாடு மற்றும் சமவாய்ப்புக்கான உரிமையை உறுதி செய்கிறது.

நம்பிக்கைக்குரிய நாடு: உலகின் மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கை இந்தியா கொண்டுள்ளதே தவிர, ஆறில் ஒரு பங்கு பிரச்னையைக் கொண்டிருக்கவில்லை. கரோனா காலகட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கியது இந்தியா. ஜி20, தெற்குலக நாடுகள் உச்சிமாநாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு உச்சிமாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். சா்வதேச சவால்களுக்குத் தீா்வுகாண கணிசமாக பங்களிப்பதால், உலக அளவில் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா விளங்குகிறது. இந்த மேன்மையைப் புரிந்துகொள்ளாத சிலரே குற்றஞ்சாட்டுகின்றனா்.

அறிவாா்ந்த சிந்தனை இல்லாத, புறக்கணிக்கத்தக்க சில தன்னாா்வ நிறுவனங்களின் ஒன்றிரண்டு அறிக்கைகளின்பேரில் கேள்வி எழுப்புகின்றனா். அது குறித்து எங்களுக்கு கவலையில்லை. நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கும் ஜனநாயக சமூகம் என்ற முறையில் நாங்கள் பெருமிதம் கொண்டுள்ளோம் என்றாா் அவா்.