12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மெட்டாவில் பணிநீக்க நடவடிக்கை தொடக்கம்! காலை 4 மணிக்கு வந்த மின்னஞ்சல்

மெட்டாவில் பணிநீக்க நடவடிக்கை தொடங்கியது, காலை 4 மணிக்கு வந்த மின்னஞ்சல்கள்.

Meta cuts 700 jobs as it shifts focus to AI investment

மெட்டா நிறுவனம் - IANS

Published On :

மெட்டா நிறுவனத்தில் சர்வதேச அளவில் பணி நீக்க நடவடிக்கைகள் தொடங்கியிருக்கிறது. சிங்கப்பூரில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு அவர்களது பணிநீக்க மின்னஞ்சல் அதிகாலை 4 மணிக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதன்கிழமை காலை முதல், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மெட்டா நிறுவன ஊழியர்களுக்கு, அவர்களது பணி நீக்க மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றுள்ளது.

சிங்கப்பூரில் வாழும் ஊழியர்களுக்குத்தான் முதல் மின்னஞ்சல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து ஐரோப்பா, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு அவர்களது பகல் நேரப்படி மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றிருக்கும்.

இந்த பணிநீக்க நடவடிக்கையின் பின்னணி குறித்து, மெட்டா நிறுவனம் அந்த மின்னஞ்சலில் விளக்கமும் கொடுத்திருக்கிறது.

இந்த பணி நீக்க நடவடிக்கைகள் முடியும்வரை, ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலிருந்தே பணியாற்றும்படி, மெட்டா நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது. மேலும் 7000 ஊழியர்களை ஏஐ-கவனமீர்க்கும் குழுக்களில் பணியாற்றும்படி மாற்றியிருக்கிறது.

மெட்டா நிறுவனத்தின் பொறியியல் மற்றும் பிராடக்ட் குழுக்களில்தான் அதிகம் நடந்திருக்கும் என்று கருதப்படுகிறது.

Summary

Layoffs have begun at Meta, with emails arriving at 4am.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.