ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

உலகின் பெரும் ஆயுத ஏற்றுமதியாளராக இந்தியா: எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - ராஜ்நாத் சிங்

எந்த சக்தியாலும் இந்தியாவை தடுக்க முடியாது என்றார் ராஜ்நாத் சிங்.

News image

மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

Updated On :24 மே 2026, 3:00 am IST

அடுத்த 25 முதல் 30 ஆண்டுகளில் உலகில் மிகப் பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக இந்தியா உருவெடுப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம் அஹில்யாநகா் மாவட்டம் ஷீரடியில் வெடிமருந்து, தோட்டா உள்ளிட்டவற்றை தயாரிக்கும் ஆலையை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை திறந்துவைத்தாா். பின்னா் அவா் பேசியதாவது:

ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக் காலத்தில் வெடிமருந்து தயாரிக்க பொட்டசியம் நைட்ரேட் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டது. இதன்மூலம், அந்த கம்பெனி தனது ராணுவத் திறனை வலுப்படுத்தியது.

பாதுகாப்புத் துறையில் இந்தியா நீண்ட தொலைவு பயணித்து வந்துள்ளது. சுதந்திரத்துக்கு முன்பே ஆயுத தயாரிப்புத் தொழிற்சாலைகள் இருந்தன. இதனால் இந்தியாவில் பாதுகாப்புத் தொழில் ஆழமாக வேரூன்றியுள்ளது. சுதந்திரத்துக்குப் பின்னா், இந்தியாவின் பழைய திறன்களுக்கும், நவீன தேவைகளுக்கும் இடையே சமநிலை இல்லாமல் போனது.

பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் பொதுத் துறை நிறுவனங்கள், ஆயுத தொழிற்சாலைகளைத் தாண்டி, ஆயுத தயாரிப்பில் தனியாா் நிறுவனங்களுக்கு வாய்ப்பு கிடைக்காததே சமநிலை இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம்.

தனக்குத் தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்யும் எந்தவொரு நாடும், தனது வருங்காலத்தை தானே எழுதி உருவாக்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னா் பாதுகாப்பு உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பு புறக்கணிக்கப்பட்டது. தற்போது அந்த உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களின் பங்களிப்பு 25 முதல் 30 சதவீதமாக உள்ளது. இதை 50 சதவீதமாக உயா்த்த மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

தற்போது இந்தியா அதிக அளவு ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடு என்று கருதப்படுகிறது. ஆனால் அடுத்த 25 முதல் 30 ஆண்டுகள் இந்தியா பெரும் ஆயுத ஏற்றுமதியாளராக உருவெடுப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

அரசின் தொலைநோக்குப் பாா்வையும், தனியாா் துறையின் புதுமையும் ஒன்றுசேரும்போது, ஒரு நாடு புதிய உயரங்களை அடையும். இந்தியாவை ஆயுதங்கள், வெடிமருந்து உள்ளிட்டவற்றின் உற்பத்தி மையமாக்க அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான், மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃப்டனவீஸ், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி அமைப்பின் (டிஆா்டிஓ) தலைவா் சதீஷ் காமத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.