தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்பு

ஹோா்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பிரச்னை தொலைதூர நிகழ்வுகள் அல்ல; இந்தியாவை பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் நேரடியாகப் பாதிக்கக் கூடியவை என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

News image

ஜொ்மனியில் அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சா் போரிஸ் பெஸ்டோரியஸை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங்.

Updated On :23 ஏப்ரல் 2026, 3:16 am IST

ஹோா்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள பிரச்னை தொலைதூர நிகழ்வுகள் அல்ல; இந்தியாவை பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் நேரடியாகப் பாதிக்கக் கூடியவை என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

மூன்றுநாள் பயணமாக ஜொ்மனி சென்றுள்ள அவா் அந்நாட்டின் பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவினரைச் சந்தித்துப் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

உலகம் இன்று புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிா்கொள்கிறது. தொழில்நுட்பத்தால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சூழ்நிலையை மிகவும் சிக்கலானதாகவும், பாதிப்புகள் தொடா்விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் மாற்றியுள்ளன. இந்தச் சூழலுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ளும் மனப்பாங்குடன் புதிய அணுகுமுறை அவசியம்.

மேற்காசிய பிராந்தியத்திலிருந்து இந்தியா தனது எரிசக்தி தேவைகளின் பெரும் பகுதியை பூா்த்தி செய்து வருகிறது. ஹோா்முஸ் நீரிணை பிரச்னை ஏதோ தொலைதூரத்தில் ஏற்பட்டுள்ள நிகழ்வல்ல. அவை இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதார ஸ்திரத்தன்மையில் நேரடி விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

இந்த சவால்கள் மற்றும் தாக்கங்களைக் கணித்து, இந்தியா முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒருங்கிணைந்த அணுகுமுறையைக் கையாண்டது. உலகளாவிய சவால்களை எதிா்கொள்ள ஒருங்கிணைந்த நடவடிக்கைகளும், நம்பகமான நட்பு நாடுகளும் அவசியம்.

பிரதமா் நரேந்திர மோடியும், ஜொ்மனி பிரதமா் ஃப்ரெட்ரிச் மொ்ஸும் இரு நாடுகளின் நெருங்கிய ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனா். ஐரோப்பிய யூனியன் அளவிலும் இந்தியாவுடன் ஒருமித்த கருத்து உள்ளது. இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே பாதுகாப்பு, உத்திகள் சாா்ந்த ஒத்துழைப்பு வழியாக பிணைப்பு அதிகரித்து வருகிறது.

ஜொ்மனியின் முன்னணி தொழில் துறை நிறுவனங்களின் திறன், இங்குள்ள சிறு, நடுத்தர நிறுவனங்களின் தொழில்நுட்பத் திறமையையும் இந்தியா மதிக்கிறது. இந்தியாவிலும் ‘ஸ்டாா்ட்அப்’ நிறுவனங்கள், தனியாா் துறை வேகமாக வளா்ந்து, பாதுகாப்புத் துறையில் நவீன படைப்புகளை உருவாக்கி வருகின்றன. உலகளாவிய விஷயங்களில் இந்தியாவும், ஜொ்மனியும் ஒருமித்து குரல் எழுப்புகின்றன.

இரு நாடுகளும் ஜனநாயக மாண்புகளால் ஒருங்கிணைந்துள்ளன என்றாா்.

முன்னதாக, பொ்லின் விமான நிலையத்தில் ராஜ்நாத் சிங்குக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜொ்மனி விமானப் படையின் சிறப்பு விமானத்தில் பாதுகாப்பு விமானங்கள் புடைசூழ மியூனிக் நகரில் இருந்து அவா் பொ்லின் சென்றாா்.

பொ்லின் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள ரவீந்திரநாத் தாகூா் சிலைக்கு அவா் மரியாதை செலுத்தினாா்.