பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

தில்லியில் சோனியா, ராகுல், கார்கேவுடன் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சந்திப்பு!

சோனியா, ராகுல், கார்கேவுடன் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சந்திப்பு

Kerala Chief Minister VD satheesan Meets Sonia, Rahul, and Kharge in Delhi

சோனியா, ராகுல், பிரியங்காவுடன் கேரள முதல்வர் சதீசன் - AICC

Published On :

தில்லியில் காங்கிரஸ் தலைவர்களை கேரள முதல்வர் வி.டி. சதீசன் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கேரள முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால், வி.டி. சதீசன், ரமேஷ் சென்னிதலா இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் நீண்ட இழுபறிக்குப் பிறகு கேரளத்தின் புதிய முதல்வராக வி.டி. சதீசன் கடந்த மே 18 அன்று பதவியேற்றுக் கொண்டார்.

இந்த விழாவில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் பங்கேற்றனர்.

Story image

இதையடுத்து முதல்வர் வி.டி. சதீசன் நேற்று தில்லி சென்றார். காங்கிரஸ் தலைவர்களின் அழைப்புக்கு ஏற்ப அவர், தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோரும் உடனிருந்தனர்.

Story image

தொடர்ந்து தில்லியில் உள்ள காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தும் முதல்வர் சதீசன் வாழ்த்து பெற்றுள்ளார்.

Story image

Summary

Kerala Chief Minister VD satheesan Meets Sonia, Rahul, and Kharge in Delhi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.