பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்! அதிமுக இரு தரப்பு மனுக்கள் மீது நாளை முடிவு! பேரவைத் தலைவர் அதிமுகவிலிருந்த கருத்து வேறுபாடு நீங்கிவிட்டது! பதவி ஆசை இல்லை! எஸ்.பி. வேலுமணி தில்லியில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு வரவேற்பு!கர்நாடக முதல்வர் சித்தராமையா நாளை ராஜிநாமா? குண்டர் தடுப்புச் சட்ட ரத்து வழக்கு! உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கும் முன்னாள் காவல் ஆணையர் அருண்!இணையும் அதிமுக: இபிஎஸ்ஸுடன் எஸ்.பி. வேலுமணி சந்திப்பு!பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை!பினராயி விஜயன் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!
/

நிர்மலா சீதாராமனுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் சி. ஜோசப் விஜய் சந்தித்தது குறித்து...

News image

நிர்மலா சீதாராமனுடன் முதல்வர் ஜோசப் விஜய் - எக்ஸ்

Updated On :27 மே 2026, 6:44 pm IST

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று (மே 27) சந்தித்துப் பேசினார்.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 4 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியதைத் தொடர்ந்து, அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை மனு வழங்கவுள்ளார்.

மாநிலத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, மாநில நிதிப் பகிர்வு தொடர்பான கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு முதல்முறையாக தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை தில்லி புறப்பட்ட விஜய், தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தார். பின்னர், பிரதமர் அலுவலகத்திற்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் தனது நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின்போது, ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்தமைக்கு முதல்வர் நன்றி தெரிவித்தார்.

மேலும், அரசு நிகழ்ச்சிகளில் மாநில வாழ்த்துப் பாடலை முதன்மையாகப் பாட வேண்டும், மேம்பட்ட நடுத்தர போர் விமான (AMCA) வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம் மற்றும் வான்வழி அமைப்பு மையத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க வேண்டும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட 4 கோரிக்கைகளை முதல்வர் விஜய் முன்வைத்தார்.

Summary

Chief Minister C joseph Vijay Meets Nirmala Sitharaman

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.