வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்ட முழுமையான தோல்வி என பாஜக விமர்சித்துள்ளது.
வாக்காளர் பட்டியலின் 'சிறப்புத் தீவிரத் திருத்தத்தை' மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திற்கு உள்ள அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் திங்களன்று உறுதி செய்தது. இந்தச் செயல்பாடு நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கான அரசியலமைப்பு ஆணையில் புதிய உயிரூட்டத்தை அளிப்பதாகத் தெரிவித்தது.
தேர்தல் ஆணையத்திற்கு ஒரு பெரும் வெற்றியைப் பெற்றுத்தரும் வகையில், இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த நடவடிக்கை சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் எனும் அரசியலமைப்புத் தேவையை முன்னெடுத்துச் செல்வதாகவும் தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
இது காங்கிரஸ் கட்சிக்கும், குறிப்பாக ராகுல் காந்திக்கும் ஏற்பட்ட முழுமையான தோல்வியாகும். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் நெறிமுறை, அரசியல் மற்றும் அரசியலமைப்பு ஆகிய மூன்று பரிமாணங்களிலும் முழுமையாகச் சரிந்துவிட்டன.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் ராகுலின் சோம்பலும், அரசியல் இயலாமையை மறைப்பதற்காக எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிராக அவர் முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுகளும் தோல்வியடைந்துவிட்டன.
காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும், அவதூறான மொழியைப் பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும் என அவர் கூறினார்.
எஸ்ஐஆர் நடைமுறை குறித்து ராகுல் பொய்களைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டிய திரிவேதி உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு காங்கிரஸின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக அவர் கூறினார்.
Summary
The BJP on Wednesday termed the Supreme Court's verdict on the SIR a "complete defeat" of the Congress and other opposition parties on "moral, political and constitutional" grounds, and asked Rahul Gandhi to introspect
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராகுலைச் சந்தித்த பிறகு 16 ஆண்டுகளுக்கு முன் என்ன சொன்னார் விஜய்? காலம் செய்தது என்ன?







