மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியையடுத்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வீட்டின் முன்பாக பாஜக பெண் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு 528 உறுப்பினர்களில் ஆதரவாக 298 உறுப்பினர்களும், எதிராக 230 உறுப்பினர்களும் வாக்களித்தனர். மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 298 வாக்குகள் மட்டுமே ஆதரவாகப் பெறப்பட்டன. இதனையடுத்து, எதிர்க்கட்சிகளால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்டது.
இந்த மசோதா தோல்வியால், பெண்களின் உரிமைகளை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என பாஜக மகளிரணியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தில்லியில் சுனேஹ்ரி பாக் பகுதியில் அமைந்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வீட்டின் அருகே பாஜக எம்.பி.க்கள் உள்பட பெண் நிர்வாகிகள் எதிர்ப்பு போராட்டம் நடத்தினர்.
தில்லி முதல்வர் ரேகா குப்தா, மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சே, பாஜக எம்.பி.க்களான ஹேமமாலினி, கமல்ஜீத் செஹ்ராவத், பன்சூரி ஸ்வராஜ், மஞ்சு சர்மா, வாத்ஸல்யா குப்தா, மனோஜ் திவாரி உள்ளிட்ட போராட்டக்காரர்கள், ராகுலின் வீட்டின் முன்பாக போராட்டம் நடத்த முற்பட்டனர்.
மேலும், ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, அவர்கள் பேசுகையில், "இந்த நாள் எங்களுக்கு மோசமான நாள். பெண்களின் சக்தி மீது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை. அவர்களுக்கு உரிமைகள் இருப்பதை எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என்பது தெரிகிறது" என்று தெரிவித்தனர்.
இருப்பினும், போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக தண்ணீர் பீய்ச்சிய காவல்துறையினர், அவர்களைக் கைது செய்தனர்.
Summary
BJP women workers march to Rahul Gandhi's residence, says 'Opposition don't want women to have rights'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழல் பாஜக ஆட்சியில் 22 லட்சம் மாணவர்களின் கடின உழைப்பு வீண்! ராகுல் காந்தி
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி! பாஜகவும் மோடியும் பெண்களுக்கு எதிரானவர்கள்: காங்கிரஸ்

பழைய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வாருங்கள்; நிறைவேற்றுகிறோம்: பிரியங்கா காந்தி
மறுவரையறை மசோதா தோல்வி! அரசியலமைப்பு மீதான தாக்குதல் தோற்கடிப்பு: ராகுல்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

