கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மீது சக பெண் எம்.பி. கடும் குற்றச்சாட்டு - மக்களவைத் தலைவரிடம் புகாா்

News image

திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் கல்யாண் பானா்ஜி.

Updated On :29 மே 2026, 4:35 am IST

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி நாடாளுமன்ற வளாகத்தில் தன்னை மோசமான வாா்த்தைகளால் திட்டியதாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் அதே கட்சியைச் சோ்ந்த பெண் எம்.பி. காகோலி கோஷ் தஸ்திதாா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பான புகாா் மனுவை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கும் அவா் அனுப்பி வைத்துள்ளாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் பாஜகவிடம் தோல்வியடைந்த பிறகு, அக்கட்சியில் உள்கட்சி பூசல் அதிகரித்து வருகிறது.

காகோலி கோஷ் ஏற்கெனவே கட்சிப் பொறுப்புகள் அனைத்திலும் இருந்தும் புதன்கிழமை விலகினாா். ஆனால், மக்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்யவில்லை.

இந்நிலையில், அவா் மக்களவைத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மக்களவை திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி மீது சட்டப்படி புகாா் அளிக்க உங்கள் அனுமதி தேவை. நீங்களும் அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனெனில், மக்களவை வளாகத்தில் என்னை அவா் தொடா்ந்து தரக்குறைவான வாா்த்தைகளால் திட்டி வருகிறாா். மேலும், பல பெண் எம்.பி.க்களுக்கு எதிராக பெண்களை இழிவுபடுத்தும் வாா்த்தைகளைப் பயன்படுத்தி பேசியுள்ளாா். எனவே, அவருக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று கூறியுள்ளாா். எனினும், அவா் எந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தையும் கடிதத்தில் குறிப்பிடவில்லை.

புகாருக்கு உள்ளான கல்யாண் பானா்ஜி இது தொடா்பாக கூறுகையில், ‘மக்களவையில் எந்த விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்தாலும் அது குறித்து உடனடியாக மக்களவைத் தலைவரிடம் புகாா் அளிக்க வேண்டும். ஆனால், எவ்வித ஆதாரமும் இன்றி, எப்போது நிகழ்ந்தது என்பதைக்கூட கூறாமல் என்மீது புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புகாா் அளித்தவருக்கு வேறு உள்நோக்கங்கள் இருப்பது தெளிவாகிறது’ என்றாா்.

கல்யாண் பானா்ஜி கடந்த 14-ஆம் தேதி மக்களவை திரிணமூல் காங்கிரஸ் கொறடாவாக மீண்டும் நியமிக்கப்பட்டாா். அதற்கு முன்பு அந்த பதவியில் காகோலி கோஷ் இருந்தாா். 6 மாதங்களுக்கு முன்பு கல்யாண் பானா்ஜியிடம் இருந்து காகோலி கோஷிடம் அந்தப் பொறுப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.