பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மகாராஷ்டிரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 15 பேர் பலி!

கள்ளச்சாராயம் குடித்து 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

toxic liquor

கள்ளச்சாராயம் - file photo

Published On :

மகாராஷ்டிர மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சிஞ்ச்வட் மற்றும் புணே சுற்றுவட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை அப்பகுதியில் உள்ள மக்கள் வாங்கி குடித்துள்ளனர். இந்த நிலையில் பெரும்பாலானோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் யோகேஷ் வான்கடே கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Summary

Reports have emerged that 15 people have died in the state of Maharashtra after consuming illicit liquor.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.