உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

மகாராஷ்டிரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி! மேலும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில்..!

மகாராஷ்டிரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலியானது பற்றி...

Pune illicit liquor tragedy: 2 arrested

கள்ளச்சாராயம் வழக்கில் கைதானவர்கள்... - ANI

Published On :29 மே 2026, 4:13 pm IST

மகாராஷ்டிரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 15 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புணே மற்றும் பிம்ப்ரி-சிஞ்ச்வட் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதனைக் குடித்த பலருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பலனின்றி இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், சம்மந்தப்பட்டவர்கள் இது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் யோகேஷ் வான்கடே என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் பல கள்ளச்சாராய வழக்குகளில் தொடர்புடையவர். மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Summary

15 dead, several in critical condition after consuming poisonous liquor in Maharashtra

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.