நிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மகாராஷ்டிரம்: புலி தாக்கியதில் 4 பெண்கள் பலி!

மகாராஷ்டிரத்தில் புலி தாக்கியதில் நான்கு பெண்கள் பலியானது குறித்து...

News image

புலி தாக்கியதில் 4 பெண்கள் பலி - கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 12:16 pm IST

மகாராஷ்டிர மாநிலம், சந்திரபூரில் பீடி இலை என்று அழைக்கப்படும் தெண்டு இலைகளைப் பறித்துக் கொண்டிருக்கும்போது, புலி தாக்கியதில் நான்கு பெண்கள் பலியானதாக வனத்துறை அதிகாரி ஒருவர், வெள்ளிக்கிழமை (மே 22) காலை தெரிவித்தார்.

சிந்தேவாஹி தாலுகாவில் உள்ள குஞ்சேவாஹி கிராமத்திற்கு அருகே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

பீடி, சிகரெட் போன்ற புகையிலைப்பொருள்களைச் சுற்றப் பயன்படுத்தப்படும் தெண்டு இலைகளைச் சேகரிப்பதற்காக, பெண்கள் குழு ஒன்று வனப்பகுதிக்குச் சென்றிருந்தது. அவர்கள் இலைகளைச் சேகரிப்பதில் மும்முரமாக இருந்தபோது, ​​அவர்களில் நான்கு பேரை ஒரு புலி தாக்கியது.

பலியான பெண்கள் குஞ்சேவாஹியைச் சேர்ந்த கவாடாபாய் மொஹர்லே (45), அனிதாபாய் மொஹர்லே (40), சுனிதா மொஹர்லே (38) மற்றும் சங்கீதா சௌதரி (50) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் ஒரே இடத்தில் நிகழ்ந்ததா? அல்லது வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்ததா? என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.

முதல் தகவல் அறிக்கை வெளிவந்த பிறகே, கூடுதல் விவரங்கள் வெளியிடப்படும் என்று வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Summary

A Forest Department official stated that four women were killed in a tiger attack while plucking Tendu leaves also known as "Beedi leaves" in Chandrapur, Maharashtra.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.